இந்திய பிரதமர் மோடி சொன்னபடி 15 லட்சம் ரூபாயை கொடுத்து அனைவரையும் அம்பானியாக்க முடியாது என ராஜஸ்தான் மாநில பாரதீய ஜனதா கட்சி தலைவர் மதன்லால் சைனி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றால் ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ருபாய் டெபாசிட் செய்யப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார்.
ஆனால் அவர் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும், அறிவித்தபடி 15 லட்சம் ரூபாய் வழங்கப்படாததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இது குறித்து பேசிய ராஜஸ்தான் மாநில பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் மதன்லால் சைனி, 15 லட்சம் பணத்தை மக்களின் கையில் ரொக்கமாக தருவேன் என மோடி சொல்லவில்லை என்றும், மோடி நிறைவேற்றியுள்ள நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு 15 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பலன்கள் கிடைத்துள்ளதாகவும் கூறிய அவர், 15 லட்சத்தை கொடுத்து எல்லோரையும் அம்பானியாக ஆக்க முடியாது என தெரிவித்துள்ளார்.



