வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு வெளிநாட்டிற்கு தப்பிச்செல்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பியோடும் விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்றோரின் சொத்துகளை பறிமுதல் செய்யும் சட்ட மசோதாவை மக்களவையில் நிதி அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார்.
இதன் மீதான விவாதம் நேற்று நடத்தப்பட்டு வாக்கெடுப்பு முடிவடைந்த பிறகு, மசோதா நிறைவேறியது. இதையடுத்து மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது.இந்த புதிய சட்ட மசோதாவின் படி வங்கிகளில் 100 கோடிக்கும் மேல் கடன் பெற்று அதை செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பியோடும், நபர்களை கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அவர்களுடைய சொத்துகளை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



