பீகாரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஏரிகள் குளங்கள் நிரம்பின. பாட்னாவில் உள்ள அம்மாநிலத்தின் 2வது பெரிய மருத்துவமனைக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. ஐ.சி.யூ., எனப்படும் அவசர சிகிச்சை பிரிவிற்குள் புகுந்த வெள்ள நீரில் மீன்கள் நீந்திச் சென்றபடி உள்ளன. இவற்றைய புகைப்படமாக எடுத்து அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அத்துடன் பீகாரை ஆளும் நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சியையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மருத்துவமனையில் வெள்ளம்:ஐசியூவில் மீன்கள்
Popular Categories



