மதுரையில் சௌராஷ்ட்டிர கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவ மாணவியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மதுரை விளாச்சேரி பகுதியில் அமைந்துள்ள சௌராஷ்டிரா கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் காவலர்கள் சோதனை மையம் அமைக்கப்பட்டது. இதில் சோதனை செய்யும்போது மாணவ மாணவியர்களை அவதூறாக பேசுவதாகவும், அபராத கட்டணம் என்ற பெயரில் அராஜக வசூலில் ஈடுபடுவதாகவும் பலவிதமான குற்றச்சாட்டுகள் எழுந்தன.



