கொச்சி: கேரளாவில் தனது ஐந்து வயது குழந்தை, ஓட்டுவதற்கு ஸ்கூட்டரைக் கொடுத்த தந்தையின் ஓட்டுநர் உரிமம் ஓராண்டுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொச்சியின் பள்ளூர்த்தியில் ஷிபு பிரான்சிஸ் என்பவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது தனது குழந்தையிடம் ஸ்கூட்டர் ஓட்டக் கொடுத்துள்ளார்.
இதனை வீடியோ எடுத்த சிலர், அந்த வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பரப்ப, இது வைரலாகப் பரவியது. இதைக் கண்ட போக்குவரத்து போலீசார் ,ஷிபு பிரான்சிஸ் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, அவரது லைசன்ஸ் ஒரு வருடத்துக்கு ரத்து செய்யப் பட்டுள்ளது.




