மலையாளத்தில் ‘மீஷ’ என்ற பெயரில் நாவல் ஒன்றை எஸ்.ஹரீஷ் என்பவர் மாத்ருபூமி வார இதழில் எழுதியிருந்தார். இதில் மிகவும் சர்ச்சைக்குரிய விதத்தில் ஹிந்துப் பெண்களையும் பிராமண பூஜாரிகளையும் இகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து அதற்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர் பலரும்.
இந்த நாவல், மாத்ருபூமி இதழில் தொடராக வெளிவந்தது. தொடர்ந்து இதனை நாவலாக வெளியிடும் முயற்சியில் அது ஈடுபட்டது. ஆனால், ஹிந்துப் பெண்களின் எதிர்ப்பால் மாத்ருபூமி இதழ் இந்த நாவலை வெளியிடுவதில் இருந்து பின்வாங்கியது. இருப்பினும், டிசி புக்ஸ் இந்த நாவலை அனைத்து சர்ச்சைக்குரிய கருத்துகளுடன் வெளியிட்டுள்ளது. இது கேரளத்தில் உள்ள அனைத்து புத்தகக் கடைகளிலும் விற்பனைக்கு வந்துள்ளது.
இதனிடையே, இந்த நாவலுக்கு எதிராக ஒரு ரிட் பெட்டிஷன் உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இதனை உச்ச நீதிமன்றமும் விசாரணைக்கு ஏற்பதாகக் கூறியுள்ளது. (SC Agrees To Hear Plea Against Malayalam Novel “Meesha” Alleging Insult To Hindu Women [Read Petition]…)
மாத்ருபூமி இதழ்களை புறக்கணிக்க வேண்டும் என்று நாயர் சமுதாயத்தினர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பெண்கள் தங்களது கைகளில் மாத்ருபூமி இதழ்களை எடுத்து வைத்து எரித்து புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து உணர்ச்சிகரமான ஒரு முடிவெடுத்தது நாயர் சமூகம். இந்த சங்கத்தின் தில்லி மத்திய கமிட்டி கூடி, 23 மண்டலங்களிலும் அனைத்து குடும்ப உறுப்பினர்களும், சங்கத்தின் உறுப்பினர்களும் உடனடியாக மாத்ருபூமி இதழ்களை வாங்குவதை நிறுத்துவதென்றும், மாத்ரு பூமி செய்தித் தாளை புறக்கணிப்பதென்றும் தீர்மானித்தனர். இதனை ஒரு சுற்றறிக்கையாகவும் அனுப்பி வைத்தனர்.
இதை அடுத்து, மாத்ருபூமி இதழ்களுக்கும் செய்தித் தாளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஹிந்துப் பெண்கள் பலரும் தங்களது கைகளில் மாத்ருபூமி இதழ்களை வீட்டின் வாசலில் வைத்தபடி, அதனை தீயிட்டுக் கொளுத்தி வீடியோவாக பதிவு செய்து, இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
After Mathrubhumi Newspaper insults temple going women, Hindu women are posting videos like this as part of the boycott campaign. pic.twitter.com/yEork7BZkZ
— Spartan (@PartyVillage017) August 1, 2018





