நடிகர் அஜீத் குமார் ஸ்டாலினிடம் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சினி நியூஸ் சென்னை தமிழகம்

ajith hospital stalin - 2026

சென்னை: உடல் நலமின்றி சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சையில் இருக்கும் திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நலம் விசாரிக்க நடிகர் அஜித் குமார் இன்று மருத்துவமனைக்கு வந்தார்.

பின்னர் திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.

முன்னர் திமுக., ஆட்சியின் போது தங்களை மிரட்டியும் கட்டாயப் படுத்தியும் கருணாநிதி விழாவுக்கு வரவழைத்தார்கள் என்று, மேடையிலேயே பட்டவர்த்தனமாக அஜித் கூறினார். அதன் பின்னர் திமுக.,வுக்கும் அஜித் குமாருக்கும் நிலவரம் சரியில்லாமல் போனது. இந்நிலையில், இன்று அவர் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க வந்திருந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.