மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூரில் கைது செய்யப் பட்டார்.
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று அதிகாலை பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப் பட்டார். தூத்துக்குடியில் நடைபெற்ற பிரிவினைவாதிகளின் வன்முறைச் சம்பவங்களையும் போலீஸார் மீது திட்டமிட்டு நடத்தப் பட்ட கொலைவெறித் தாக்குதலையும் மறைத்து, போலீஸாரின் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை மனித உரிமை மீறல் என்று கூறி, ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.
இதை அடுத்து, திருமுருகன் காந்தியை பழைய போராட்ட வழக்குகளில் போலீஸார் கைது செய்துள்ளதாகக் கூறப் படுகிறது.
இந்நிலையில், இவரை விடுதலை செய்ய வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி – தமுமுக ஊடகப் பிரிவு ஆகியவை வலியுறுத்தியுள்ளன.
இதை அடுத்து தற்போதைய எதிர்க்கட்சியாக செயல்படும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பதிவுகளில் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை ஐநா அவையின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பதிவு செய்ததற்காக, மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளது, மனித உரிமை மீறல் மட்டுமல்லாது அடிப்படை உரிமையை மீறும் செயல். என்று கூறியுள்ளார்.
திருமுருகன் காந்தியை விமான நிலையத்திலேயே வைத்து கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 9, 2018




