கேரளாவில் வரலாறு காணாத வகையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள பழங்குடியினரின் நிலையை விளக்கும் வகையில் சுதிப் சுதாகரன் என்ற ட்விட்டர் கணக்காளர் வீடியோ ஒன்றைப் பதிவிட்டு ள்ளார். அதில் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர், பழங்குடியினரின் பகுதிக்குள் செல்கிறார். அங்குள்ள சிறுமியிடம் உணவு இருக்கிறதா என்று கேட்க, அந்தச் சிறுமி “இங்கு உணவு இல்லை என்று மயக்கம் கலந்த புன்னகையுடன் கூறுகிறார். இரவிலும் உணவு உண்ணவில்லை” என்கிறார். இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து கேரளாவுக்கு உதவுங்கள் என்று கேரள அரசு குறிப்பிட்டுள்ள https://donation.cmdrf.kerala.gov.in/ இணையதளப் பக்கத்தை குறிப்பிட்டுப் பகிர்ந்து வருகிறார்கள்.




