புது தில்லி: கேரள மழை வெள்ள பாதிப்பை அதி தீவிர இயற்கை பேரிடர் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது! இந்த அறிவிப்பின் விளைவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே தங்களின் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் வரையில் கேரள மாநில மறு சீரமைப்பு பணிகளுக்காக
ஒதுக்க முடியும்!
இதை தெளிவுபடுத்தி மக்களவை சபாநாயகரும் மாநிலங்களவைத் தலைவரும்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்ய கோரி இருக்கிறார்கள்!
அத்துடன் தங்களின் ஒரு மாத சம்பளத்தை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு வழங்க தீர்மானத்து இருப்பதைக் கூறி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்!




