வரும் 28ம் தேதி தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது திமுக பொதுக்குழு!

சற்றுமுன் தமிழகம்

IMG 20180820 212653 - 2026திமுக பொதுக்குழு வரும் 28-ம் தேதி மு.க ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் கூடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி, கடந்த 7ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து, கடந்த 14ம் தேதி திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

IMG 20180820 213824 - 2026இந்நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி திமுக பொதுக்குழுக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

IMG 20180820 214144 - 2026இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தின் போது, தணிக்கைக்குழு அறிக்கை, தலைவர் மற்றும் பொருளாளர் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்டாலின் போட்டி இன்றி தலைவராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

IMG 20180820 211846 - 2026செப்டம்பர் 5-ம் தேதி கருணாநிதி சமாதியை நோக்கி பேரணி செல்ல உள்ளதாக மு.க அழகிரி அறிவித்துள்ள நிலையில் திமுக பொதுக்குழு கூடுவது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.