தூத்துக்குடி காவல்துறை சார்பில் கேரளத்திற்கு வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்கணிப்பாளர் முரளி ரம்பா ஏற்பாட்டில் தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர்கள் சார்பாக கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் 50 ஆக்சிஜின் சிலிண்டர்கள், 15 பெட்டிகளில் மருந்து பொருட்கள், 120 அரிசி மூட்டைகள், 200 கிலோ துவரம் பருப்பு, 100 கிலோ உளுந்து பருப்பு, 20 பெட்டி பிஸ்கெட் பாக்கெட்கள், 10 பெட்டி ரஸ்க் பாக்கெட்கள், 600 பாக்கெட் தீப்பெட்டி பண்டல்கள், 4500 மெழுகுவர்த்திகள் மற்றும் 2 பெட்டி டெட்டால் சோப்புகள் ஆகியவை சேகரிக்கப்பட்டு கேரளாவிற்கு அனுப்பிவைக்கபட்டது.



