புதுதில்லி: இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் மாரடைப்பு ஏற்பட்டுதான் மரணம் அடைந்தார்கள் என்று மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பாதல் கூறியுள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டை அளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
முன்னதாக இங்கிலாந்து சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, 1984ஆம் ஆண்டு நடந்த சீக்கிய படுகொலை குறித்து பேசினார். அதில், எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் மிகவும் வலி நிறைந்ததுதான். ஆனால் அதில் காங்கிரஸுக்கு தொடர்பு உள்ளது என்று கூறுவதை என்னால் ஏற்க முடியாது. வன்முறைச் சம்பவமே, பின்னர் கலவரமாக மாறியது என்று பேசினார்.
அவரது பேச்சுக்கு சிரோமணி அகாலிதளம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கௌர் பாதல் செய்தி நிறுவனத்து அளித்த பேட்டியில் கூறுயபோது, ராகுலின் இந்தக் கருத்து காயத்தில் உப்பைத் தடவுவதை போல் உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் சீக்கிய படுகொலை நடக்கவும் இல்லை, சீக்கியர்கள் யாரும் உயிரிழக்கவுமில்லை என்றுகூட ராகுல் சொல்வார். இதன் மூலம் சீக்கிய இனப் படுகொலையில் தொடர்புடைய காங்கிரஸ் தலைவர்களைக் காப்பாற்ற நினைக்கிறார் ராகுல்.
ராகுலின் பாட்டி சீக்கியர்களை அழித்தார். அவர் தந்தையோ பஞ்சாப்பை துண்டாக்கினார். ராகுலின் தந்தை படைகளை அனுப்பி ஆயிரக்கணக்கான சீக்கியர்களைக் கொன்றார். அவர்கள் பஞ்சாப்புக்கு அளித்ததும் இந்த இனப் படுகொலையைத் தான்! ராகுல் காந்தி குழந்தைத் தனமான அரசியல் மற்றும் முதிர்ச்சியின்மையுடன் நாட்டுக்கு பொய்களை அவிழ்த்து விடுகிறார்.
ராகுலின் மூளையில் என் மூளையை வைத்துச் சொல்கிறேன். அவரது கூற்றுப் படி சீக்கிய படுகொலை நடக்கவே இல்லை என்றால், எனது கூற்றுப்படி அவரது தந்தையும், பாட்டியும் படுகொலை செய்யப்படவே இல்லை. அவர்கள் இருவரும் வெகு சாதாரணமாக மாரடைப்பினாலேயே உயிரிழந்தனர்… என்று கூறியுள்ளார்.
I say today with R.Gandhi’s brain, that I’m putting in place of my brain. If as per him Sikh Massacare never took place then as per me his father&grandmother were never assasinated, they died of normal heart attack: Union Min HK Badal on R.Gandhi’s statemenet on 1984 riots, y’day pic.twitter.com/arhpqZxUOh
— ANI (@ANI) August 25, 2018
மேலும், கடந்த 2014 ஆம் ஆண்டு டிவி சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில், சீக்கிய படுகொலையில் காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக ராகுல் காந்தி பேசிய வீடியோ, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் சீக்கிய இனப் படுகொலைக்காக மன்னிப்பு கோரிய வீடியோக்கள் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஹர்சிம்ரத் கௌர் பாதல்.
.@RahulGandhi denial won’t wash off the blood of innocents from your family’s hands. @INCIndia and your family is responsible for the carnage of thousands of Sikhs and its a fact known to the world. This explains why Sikhs have been denied justice for 34 years. https://t.co/WpA4qJifgy
— Harsimrat Kaur Badal (@HarsimratBadal_) August 25, 2018




