இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி

Published:

02 Aug18 India - 2026

இந்திய இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்டின் முதல் நாளில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 246 ரன் எடுத்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடத்தொடங்கிய இந்திய அணி ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்திருந்தது. இங்கிலாந்தை விட இந்திய அணி 227 ரன்கள் பின் தங்கியிருந்தது. இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடர்ந்து இன்று நடைபெறுகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு டெஸ்டுகளில் இங்கிலாந்தும், நாட்டிங்காமில் நடந்த 3வது டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன.

இதனால் தொடரில் இங்கிலாந்து 2க்கு 1 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணி 15 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்தது. பும்ரா மூன்றாவது ஓவரின் முதல் பந்திலேயே கே.கே.ஜென்னிங்ஸ் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16... கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

இதைத் தொடர்ந்து 4 ரன்களில் இஷாந்த் சர்மா ஓவரில் கேப்டன் ரூட் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து பட்லரும், பென் ஸ்டோக்சும் சேர்ந்து இந்திய வீரர்களின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டனர். இருப்பினும், பும்ரா, இஷாந்த் சர்மா, முகம்மது ஷமி, அஷ்வின் ஆகியோரின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாத இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன.

இறுதியில் இங்கிலாந்து அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 246 ரன்களை எடுத்தது.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 4 ஓவர்களில் 19 ரன் எடுத்தது. தவான் 3, ராகுல் 11 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடர்ந்து நடைபெறுகிறது.

Related articles

Recent articles

spot_img