கோலி 6000…! கொண்டாடிய ஹோட்டல்! சர்ப்ரைஸில் சரிந்த விராட்…!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல் விளையாட்டு

virat 6000 - 2026

இங்கிலாந்து மண்ணில் தனக்கு இப்படி ஒரு சர்ப்ரைஸ் கிடைக்கும் என்று விராட் கோலி நினைத்துப் பார்த்திருக்கவில்லை! அதுவும் இங்கிலாந்தில் இந்திய அணியின் கேப்டனுக்கு இப்படி ஒரு வாழ்த்தா?! நெகிழ்ந்து தான் போனார் விராட் கோலி! அந்த நெகிழ்ச்சியை தனது டிவிட்டர் பக்கத்தில் படத்துடன் போட்டு பூரிப்படைந்துபோனார்!

 

குறைந்த போடிகளில் 6000 டெஸ்ட் ரன்களைக் கடந்தார் விராட் கோலி. அதைக் கொண்டாடும் வகையில் சௌதாம்ப்டன் ஹார்பர் ஹோட்டல் ஊழியர்கள் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தனர்.  அதுதான் இந்த 6000 என எழுதப் பட்ட வாழ்த்து!

இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய அணி, தற்போது நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. சௌதாம்ப்டன் நகரில் நடைபெற்று வரும் இந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்னும், இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 273 ரன்னும் எடுத்தன.

அந்த முதல் இன்னிங்ஸில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 46 ரன் எடுத்த போது, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 6000 ரன் என்ற மைல்கல்லை எட்டினார். இந்த சாதனையை எட்ட அவருக்கு 119 இன்னிங்ஸ்கள் தேவைப் பட்டுள்ளன. இப்படி குறைந்த போட்டிகளில் 6 ஆயிரம் ரன் எடுத்தவர் பட்டியலில் 117 இன்னிங்ஸில் இந்தியாவின் சுனில் காவஸ்கர் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு இரு இன்னிங்க்ஸ் குறைவாக கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இப்படி கோலியின் சாதனையைப் பாராட்ட நினைத்த சௌதாம்ப்டன் ஹார்பர் ஹோட்டல் நிர்வாகத்தினர்,  உணவு தட்டில் 6000 என எழுதி செர்ரி பழங்கள், இரண்டு கேக்குகள் வைத்து அலங்கரித்து கோலிக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர். இதை  போட்டோ எடுத்து தனது டுவிட்டரில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் கோலி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.