புது தில்லி: அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை, சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகியவை சம பாகங்களாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010இல் அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்குகளின் தீர்ப்பு இன்று அளிக்கப்படுகிறது.
இதேபோல், இந்திய தண்டனையியல் சட்டத்தின் 497-ஆவது பிரிவு செல்லுபடியாகுமா? என்பது தொடர்பான வழக்கிலும் உச்ச நீதிமன்றம் வியாழக் கிழமை இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.
இந்தப் பிரிவானது, வேறொரு நபரின் மனைவி என்று தெரிந்திருந்தும், அந்த நபரின் சம்மதத்துடனோ, சம்மதம் இல்லாமலோ அப்பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்பவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வகை செய்கிறது.




