புது தில்லி: மானியம் இல்லாத சமையல் சிலிண்டர் விலை ரூ. 59 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
சர்வதேச சந்தையின் விலை மற்றும் அந்நிய செலாவணியில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கம் காரணமாக தில்லியில் மானியம் இல்லாத சமையல் சிலிண்டரின் விலை ரூ.59 உயர்த்தப்பட்டுள்ளது.
மானிய விலை சிலிண்டரின் விலை ரூ.2.89 காசு உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்த விலை உயர்வு குறித்து அறிவிக்கப் பட்டுள்ளது.
மானியமில்லாத சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருப்பதால் மானியம் பெறுபவர்களுக்கு வங்கியில் செலுத்தப்படும் தொகை ரூ.376.60 ஆக உயர்த்தப்படும். இந்தத் தொகை கடந்த மாதம் வரை ரூ.320.49 ஆக இருந்தது.




