உண்மையான பெண் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு வரமாட்டார்கள் என்றும், பெண்ணியவாதிகள் மட்டுமே பதினெட்டாம் படியேறி சுவாமியை தரிசிக்க வருவார்கள் என எதிர்பார்ப்பதாக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறியிருக்கும் கருத்து சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனோடு ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வனங்களின் ஊடாக வரும் கரடுமுரடான பாதையில், நெரிசல் மிகுந்த கூட்டத்தில், பெண்கள் மலையேறி வந்து மலையப்பனை தரிசிப்பது சாத்தியமா எனத் தெரியவில்லை என்றார்.
ஐயப்ப சீசனின் போது, தொடர்ந்து 17 மணி நேரம் கால்கடுக்க நின்று, பெண்கள் எப்படி தரிசிக்கப் போகிறோர்களோ என்றும் பத்மகுமார் கூறினார். இவற்றையெல்லாம் பார்க்கையில்,உண்மையான பெண் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு வரமாட்டார்கள் என்றும், பெண்ணியவாதிகள் மட்டுமே மலையேறி வந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும், திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்திருக்கிறார்.




