ஐபிஎல் சீசன் 8-ல் கலக்கக் காத்திருக்கும் பெண் வர்ணனையாளர்கள் 4 பேர்!

melanie-horz ஐபிஎல் சீசன் 8 -ல் இந்த முறை 4 பெண் வர்ணனையாளர்கள் கலக்கக் காத்திருக்கிறார்கள். அந்த நான்கு பேருமே கிரிக்கெட் விளையாட்டில் தேர்ந்த வீராங்கனைகள் என்பது ஆச்சரிய்மான ஒன்று! ஐபிஎல்.,லில் பெண்களை கவர்ச்சிக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஏற்கெனவே உள்ளது. ஆனால் இந்த முறை கிரிக்கெட் நிபுணர் குழுவில் பெண்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இந்த ஐபிஎல் சீஸன் 8ல்  26 பேர் கொண்ட வர்ணனையாளர்கள் குழு அறிவிக்கப்பட்டது. அதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரவி சாஸ்திரி வர்ணனையாளராக மீண்டும் வருகிறார். இந்த வர்ணனையாளர்கள் குழுவில் ஹைலைட் …  4 பெண்கள் இடம்பெற்றிருப்பதுதான். அஞ்சும் சோப்ரா, இஷா குஹா, லிசா ஸ்தலேகர், மெலானி ஜோன்ஸ் ஆகிய நான்கு பேரும் ஏற்கென்வே கிரிக்கெட் வீராங்கணைகளே…! அஞ்சும் சோப்ரா, இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் முன்னாள் கேப்டன். ஏற்கெனவே பலமுறை கிரிக்கெட் நிபுணர் குழுவில் இடம்பெற்றவர். இஷா குஹா, இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர். இவரும் கிரிக்கெட் வர்ணனையாளர்  குழுவில் இடம்பெற்றவர்தான். லிசா ஸ்தலேகர், இந்திய வம்சாவளி நபர். ஆஸ்திரேலிய அணியில் விளையாடியவர். மெலானி ஜோன்ஸ், ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்று விளையாடியவர்தான்.

ஐபிஎல் வர்ணனையாளர் குழு:

ரவி சாஸ்திரி

ஹர்ஷா போக்ளே

ரமீஸ் ராஜா

ரஸல் அர்னால்ட்

சஞ்சய் மஞ்ச்ரேகர்

ஸ்காட் ஸ்டைரிஸ்

சைமன் டோல்

சுனில் கவாஸ்கர்

ஆகாஷ் சோப்ரா

ஆலன் வில்கின்ஸ்

அஞ்சும் சோப்ரா

பிரண்டன் ஜுலியன்

டேமியன் பிளெமிங்

டேனியல் மாரிஸன்

டேமின் மார்டின்

டேவிட் லாயிட்

எச்டி ஆகர்மேன்

இயன் பிஷப்

இஷா குஹா

கெப்ளர் வெஸல்ஸ்

லஷ்மண் சிவராமகிருஷ்ணன்

லிசா ஸ்தலேகர்

மைக்கேல் ஹெஸ்மேன்

முரளி கார்த்திக்

மெலானி ஜோன்ஸ்

மெபாங்வா