புதுதில்லி: இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக நசீம் ஜெய்தி பதவியேற்க உள்ளார். தற்போது தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகிக்கும் பிரம்மாவின் பதவிக்காலம் ஏப்ரல் 19ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் நடவடிக்கையில் சட்ட அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, தேர்தல் ஆணையத்தில் மூத்த ஆணையராக இருக்கும் நசீம் ஜெய்தியை, புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நசீம் ஜெய்தி 19-ம் தேதி தலைமை ஆணையராக பொறுப்பேற்பார். இவர் வரும் 2017-ம் ஆண்டு வரை, அதாவது 65 வயது ஆகும் வரையில் இந்த பதவியில் நீடிப்பார்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக நசீம் ஜெய்தி பொறுப்பேற்கிறார்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari