சபரிமலை விவகாரத்தில் புதிய திருப்பமாக, கேரளா அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
சபரிமலை கோவிலுக்கு பக்தர்களை தவிர யாரும் செல்லக் கூடாது என கேரளா அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பதற்றமான சூழ்நிலை காரணமாக பக்தர்களை தவிர செய்தியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சபரிமலை செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.
சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப தேவசம் போர்டு உத்தரவு பிறப்பித்தது. மேலும், சபரிமலை கோவிலுக்குள் செல்ல செய்தியாளர்கள், சமூக ஆர்வலர்களுக்கு அனுமதியில்லை என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சன்னிதானம் நோக்கி 2 பெண்கள் சென்றனர். செய்தியாளர் உள்பட 2 பெண்கள் சபரிமலை சன்னிதானம் நோக்கி சென்றனர்.
போராட்டக்காரர்களின் எதிர்ப்பையும் மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானத்துக்கு 2 பெண்கள் சென்று கொண்டிருந்த போது, கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆந்திராவை சேர்ந்த பெண் தேஜா தொலைக்காட்சி பத்திரிக்கையாளர் கவிதா மற்றும் கருப்பு ஆடையுடன் இருமுடி சுமந்து கொண்டு மற்றொரு பெண் சபரிமலைக்குச் சென்றார். போராட்டக்காரர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, அவர்களை சபரிமலையில் அனுமதிக்க தேவஸம் போர்டு திடீரென தயக்கம் தெரிவித்தது!





antha innoru pen nirvanamaha photo eduthu mutha porattam seith rehana fathima.. ava kondu vanthathu irumudi illayam koyya palamam.
It is really great and shows the high standard quality of CM cabinet and police officers facing well a sensitive issue. Though first CM accepted the court verdict he gave importance of Public feeling being a communist he did so for welfare of state is great let not opposition to find fault but get along with him.