சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல முயன்ற பெண்கள் இருவரைப் பக்தர்கள் பம்பையிலேயே தடுத்து நிறுத்தினர். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்துச் சபரிமலைக்குச் செல்வதற்காகப் பெண்கள் அமைப்பினர் பலரும் நாள்தோறும் முயன்று வருகின்றனர். பக்தர்களின் கடும் எதிர்ப்பால் அவர்கள் திரும்பிச் செல்கின்றனர். இந்நிலையில் இன்று சபரிமலைக்குச் செல்வதற்காக வந்த பெண்கள் இருவரைப் பம்பையிலேயே பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து இருவரையும் காவல்துறையினர் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பி வைத்தனர். இதனிடையே சபரிமலை ஐயப்பன் கோவிலில் பஞ்சரி மேளம் எனப்படும் பாரம்பரிய இசை நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது.




