பாஜகவின் மூத்த தலைவரும், டெல்லியின் முன்னாள் முதலமைச்சருமான மதன்லால் குரானா நேற்று காலமானார். அவருக்கு வயது 82. டெல்லியில் கடந்த 1993 முதல் 1996ம் ஆண்டு வரை முதலமைச்சர் பொறுப்பிலிருந்த குரானா, பாரதிய ஜனதா கட்சியில் தொடர்ந்து தேர்தல்களில் வெற்றி பெற்ற தலைவர்களில் ஒருவர். கடந்த 2003ம் ஆண்டு வரை பதினோரு தேர்தல்களில் அவர் வெற்றி பெற்றுள்ளார். வாஜ்பாய் அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த அவர், பின்னர் 2004ம் ஆண்டு அவர் ராஜஸ்தான் மாநில ஆளுநராகவும் பணியாற்றினார். பின்னர் அரசியலில் இருந்து விலகிய அவர், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




