தேசிய தூய காற்று திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, டெல்லியில் மாணவர்கள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்த தேசிய தூய காற்று திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. இந்நிலையில், தற்போது டெல்லியில் காற்றின் தரம் அபாய அளவை எட்டியிருப்பதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். எனவே, தூய காற்று திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை கோரி, பொதுமக்களும், மாணவர்களும் மத்திய சுற்றுச்சூழல் துறை தலைமையகம் முன் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari