கனரக வாகனங்கள் டெல்லியில் நுழைவதற்கு நேற்றிரவு முதல் மூன்று நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்றின் மாசு அதிகரித்து மிக அபாயகராமான நிலையை அடைந்துள்ள நிலையில், நேற்றிரவு 11 மணி முதல் சரக்கு லாரிகள், டேங்கர் லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் டெல்லிக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தப்படுகின்றன. அவை வேறு பகுதிகளுக்குத் திருப்பி விடப்படுகின்றன. டெல்லியின் எல்லைப் பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.ஆயினும் காய்கறிகள், உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் ,பால், பழங்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று டெல்லி போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
Popular Categories




