பாஜக., ஆட்சியிலேயே வளர்ச்சி! என்னை ஆதரிக்கும் மக்கள்: மோடி பெருமிதம்!

Published:

modi - 2026

ஜக்தல்பூர் : பாஜக, ஆட்சியிலேயே வளர்ச்சி சாத்தியப் பட்டுள்ளது. மக்கள் என் மீது அபார நம்பிக்கை வைத்துள்ளனர். சட்டீஸ்கர் பாஜகவுக்கு ஆதரவளிக்கிறது என பிரதமர் மோடி சட்டீஸ்கரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.

சட்டீஸ்கர் மாநில சட்டப் பேரவைக்கான முதல் கட்ட தேர்தல் நவ.12ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜக்தல்பூரில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பாஜக., ஆட்சிலேயே வளர்ச்சி அதிகரித்துள்ளது. ஜாதி அரசியல் மிகுந்திருந்த சட்டீஸ்கரில் தற்போது அது காணாமல் போயுள்ளது. மக்கள் என் மீது அதிருப்தியில் இல்லை. மாறாக இப்போதும் என் மீது மக்கள் நம்பிக்கையே வைத்துள்ளனர் என்றார்.

மேலும் அவர் பேசுகையில், எனது ஆட்சியில் சட்டீஸ்கரில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. நக்சல்களுக்கு வளர்ச்சி எதிரி. ஏழைகள் மற்றும் பழங்குடியினரை குறிவைத்தே நக்சல்கள் உள்ளனர். ஆனால் நக்சல்களுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டையாக உள்ளன. நகர்ப்புறங்களில் வாழும் நக்சல்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்கின்றன என்றார் மோடி.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img