[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
திருவனந்தபுரத்தில் தேடப்பட்டு வந்த டிஎஸ்பி ஹரிகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவனந்தபுரம் மாவட்டம், நெய்யாற்றின்கரை போலீஸ் டி.எஸ்.பி.யாக இருந்தவர் ஹரிகுமார். தனது வீட்டிலிருந்து கடந்த 5-ம் தேதி இரவு 11 மணிக்கு காரில் வெளியே புறப்பட முயன்றார். காரை எடுக்க இடையூறாக நெய்யாற்றின்கரை காவுவிளையைச் சேர்ந்த சனல் (32) என்பவரின் கார் நின்றிருக்கிறது. இதில் டி.எஸ்.பி. ஹரிகுமாருக்கும், சனலுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது டி.எஸ்.பி. தள்ளியதில் சாலையில் விழுந்த சனல், அப்பகுதியாக மிகவும் வேகமாக வந்த மற்றொரு கார் மோதி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
அங்கிருந்து தப்பி ஓடிய டி.எஸ்.பி. ஹரிகுமார் சஸ்பெண்டு செய்யப்பட்டதுடன் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த டி.எஸ்.பி.ஹரிகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



