காஷ்மீரில் மசூதிகள் மற்றும் மதரஸாக்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்பி, காஷ்மீர் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர் என்று ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடையே பேசிய போது, வதந்திகளை நம்பி, ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி ராணுவத்தினருக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் போராடுகின்றனர். எனவே இளைஞர்களை தவறாக வழிநடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! பயங்கரவாதத்தில் சேர வேண்டாம் என இளைஞர்களுக்கு தொடர்ந்து அறிவுரை வழங்கி வருகிறோம்.
பயங்கரவாதத்தில் சேர்ந்தால் நீண்டநாட்கள் வாழ முடியாது என்பதை இளைஞர்களுக்கு எடுத்துக் கூறிவருகிறோம்! அதை மீறும் இளைஞர்கள் பின்வளைவுகளை சந்தித்தே ஆகவேண்டும் என்றார் பிபின் ராவத்.




