தென்காசியில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு திப்பு ஜெயந்தி குறித்து ஒட்டியுள்ள போஸ்டர்கள், நான்கு நாட்கள் கடந்தும் இப்போதும் பொதுமக்கள் பார்வையில் உள்ளன.
திப்பு சுல்தான், ஆயிரக்கணக்கான இந்துக்களை கொலை செய்தும், மதம் மாற்றியும் இருநூறு ஆண்டுகால வரலாற்றில் கொடுங்கோலன் என்று பெயர் பெற்றவனாய்த் திகழ்ந்தான். தனது ஆட்சியைப் பாதுகாக்க, பொதுமக்கள் கோபத்தில் இருந்து தப்பிக்க, துவக்கத்தில் ஸ்ரீரங்கப் பட்டணம் கோயிலுக்கு உதவுவது போல் நடித்தவன். பின்னாளில் மதவெறி கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவி இந்து மக்களை வாள் முனையில் கொன்று குவித்தான். இவை எல்லாம் திப்புவின் வரலாற்றில் ரத்தக் கறை படிந்த நிகழ்வுகள்.
அதனால்தான், கர்நாடகத்தில் இந்துக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த திப்புவுக்கு விழா எடுப்பது, இஸ்லாமிய ஓட்டு வங்கிக்கு உதவும் என்ற மத அடிப்படைச் சிந்தனையில் காங்கிரஸின் முன்னாள் முதல்வர் சித்தராமையா இயங்க, இந்தப் பிரச்னையில் நாம் ஏன் தலையிட வேண்டும் என்று இந்நாள் முதல்வர் குமாரசாமி ஒதுங்கிக் கொண்டார். அதுவே கர்நாடகத்தில் தற்போதைய அரசியல் விவாதங்களை சூடாக்கியிருக்கிறது.
திப்புவுக்கு அரசு விழா எடுப்பதை கர்நாடகத்தில் அதனால்தான் பாஜக., எதிர்த்து வருகிறது. திப்பு குறித்து உண்மையைப் பேசிய பத்திரிகையாளர் ஒருவர் செவ்வாய்க்கிழமை இன்று அதிகாலை கர்நாடகத்தில் கைது செய்யப் பட்டிருக்கிறார்.
தென்காசியில் இஸ்லாமிய வெறியர்களால், குமார் பாண்டியன் படுகொலை நிகழ்ந்ததற்குப் பிறகு, கடந்த பத்தாண்டுகளாக, போஸ்டர் ஒட்டுவதில் கெடுபிடி காட்டி வந்தனர் போலீஸார். இந்து அமைப்புகளின் போஸ்டர்கள் என்று மட்டும் இல்லை… இந்துக்களின் பண்டிகைகள், கோயில் திருவிழாக்களின் போஸ்டர்கள் ஒட்டுவதைக் கூட ஏதோ தேச துரோகக் குற்றம் போல் தடுத்து, வழக்குகள் போட்டு கெத்து காட்டி வந்த போலீஸார், இஸ்லாமிய அமைப்புகளின் போஸ்டர்கள் ஒட்டுப் படுவதில் எந்த வித எதிர்ப்பையும் காட்டுவதில்லை என்று குறை சொல்கிறார்கள் இந்து அமைப்பினர்.
செங்கோட்டையில் இந்துக்கள் கடைகளில் இந்துக்கள் பொருள்களை வாங்க வேண்டும் என்று போஸ்டர் ஒட்டியதற்கே, நகர இந்து முன்னணி தலைவரைக் கைது செய்து வழக்குகள் பதிவு செய்தனர். ஆனால், இஸ்லாமிய அமைப்புகளை கண்டும் காணாமல் சாய்ஸில் விட்டுவிடுகின்றனர் என்று சொல்லி போலீஸாரைக் கண்டு கைகொட்டிச் சிரிக்கின்றனர் தென்காசி வாழ் இந்துக்கள்!




