
நீண்டதூர ரயில்களில் பெண்களுக்கு என தனியாக முன்பதிவு இல்லாத பெட்டிகள் இனி இருக்காது என ரயிலே அறிவித்துள்ளது.
நீண்ட தூர ரயில்களில் பெண்களுக்காக முன்பதிவு இல்லாத பெட்டிகளில் ஒன்று இதுவரை ஒதுக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, திருவனந்தபுரம் – சென்னை மெயில் மற்றும் கொச்சுவேலி – பெங்களூரு ரயில்களில் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்த ரயில்களில் முன்பதிவு இல்லாத மூன்று பொது பெட்டிகளில் ஒன்று முதல் 30 வரையிலான இருக்கைகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
‘பெண்களுக்காக’ என்ற ஸ்டிக்கரும் அந்த இருக்கைகளில் ஒட்டப்பட்டுள்ளன.
ரயில்களில் இதுவரை எஸ்.எல்.ஆர்., ரக பெட்டிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த பெட்டிகளில் பார்சல் வேன் வசதி கொண்ட பெட்டி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது.
தற்போது எல்.எச்.பி., ரக பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த புதிய ரக பெட்டிகளில் பார்சல் வேன் வசதி இருக்காது என்பதால்தான் இந்தப் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.