சரணகோஷம் போடுறார்… மோகன்லால்!

Published:

mohanlal swamycharanam - 2026

கேரளத்தில் சபரிமலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஐயப்ப பக்தர்களுக்கு ஆதரவாக ஒருபுறமும் அரசுக்கு ஆதரவாக மற்றொரு புறமும் என பிரிந்து கிடக்கிறது கருத்துத் தளம்.

ரஜினி காந்த், மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்கள் சபரிமலை பக்தர்களுக்கு ஆதரவான கருத்துகளை இப்போதாவது கூற வேண்டும் என்றும், கருத்துத் தளங்களில் அவர்கள் வாய் திறந்தால்தான் அவர்களின் நிலைப்பாடு தெரியவரும் என்பதுடன், ஆதரவும் கூடும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், மோகன் லால் வெளிப்படையாகவும் பட்டவர்த்தனமாகவும் இல்லாவிட்டாலும், தனது எண்ணத்தை வெளிப்படுத்திவிட்டார்.

மோகன்லால் தனது பேஸ்புக்கில், ஸ்வாமி சரணம் என்று எழுதி, இரு கை கூப்பியது போல், ஐயப்பன்மார் வளர்க்கும் ஷேவ் செய்யப் படாத இயற்கையான தாடியுடன், ஐயப்பன்மார் அணியும் கறுப்புத் துண்டையும் அணிந்த படி ஒரு போஸ் கொடுத்து, தனது பேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறார்.

இந்தப் பதிவு, ஐயப்ப பக்தர்களுக்கு ஆதரவாக தானும் இருப்பது போன்ற கருத்துதான் என்று பலரும் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img