சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் வருகை குறைவு காரணமாக வருமானமும் குறைந்துள்ளது. மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு, தொடர்ந்த ஒரு வார காலத்தில் மிகப்பெரிய அளவில் சபரிமலை வருமானத்தில் சரிவு ஏற்பட்டு இருப்பதாக தேவஸ்வம் போர்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உச்ச நீதிமன்றம் அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை செல்லலாம் என்று தீர்ப்பு வழங்கிய பின்னர் சபரிமலை கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது. இதற்கு போலீசாரின் கெடுபிடிகள் மற்றும் பக்தர்களை போலீசார் நடத்தும் விதம் ஆகியவை காரணம் என்று கூறப் படுகிறது.
முன்பெல்லாம் மண்டல பூஜை காலங்களில், ஒரு நாளைக்கு 80 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரையிலான பக்தர்கள் ஒவ்வொரு நாளும் சபரிமலைக்கு வந்து கொண்டிருப்பார்கள் கடந்த வருடம் கூட நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேர் வீதம் மண்டல பூஜை காலத்தில் சபரிமலைக்கு வந்ததாக பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் இந்த வருடம் நவம்பர் மாதம் 16ஆம் தேதி சபரிமலை நடை திறந்த பின்னர் பக்தர் வருகையில் மிகப் பெரும் சரிவு ஏற்பட்டு இருக்கிறது. வியாழக்கிழமை நேற்று இரவு வரை மொத்தமே ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே சபரிமலைக்கு வருகை தந்ததாகக் கூறப்படுகிறது.
உண்டியலில் பக்தர்கள் போடும் வருமானம் 33 சதவிகிதம் அளவுக்கு குறைந்து உள்ளது. திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு ஆணையர் என்.வாசு இது குறித்து கூறிய போது சபரிமலையில் வரும் கூட்டம் மிகப் பெரிய அளவில் குறைந்துள்ளது அது பின்வரும் காலங்களில் அதிகரிக்கும் என்று நம்புகிறோம். சென்ற வருடம் மட்டும் 6 கோடி பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர். அதன் மூ