கார்த்திகை மாத ஒளிவெள்ளம்

Published:

temple deepam - 2026

கார்த்திகை மாத ஒளி வெள்ளம் | கவிதை: மீ.விசுவநாதன்

தீர்த்தனை எண்ணி வழிபடவே – மனத்
தீவினில் தீயின் புதுவண்ணம்
கார்த்திகை மாத ஒளிவெள்ளம் – நம்
கவலைகள் போக்கும் அதுதிண்ணம்

மாமலை அண்ணல் சிவனுருவை – விண்
மண்ணிலே காட்டும் மலைநெருப்பு
ஆவலைத் தூண்டும் இறையவனின் – தீ
அழகிலே சொக்கும் விழியிரண்டு

ஓமெனச் சொல்லும் ஒருபொழுது – நம்
உள்மன ஆத்மன் குளிர்ந்திடுவான்
நாமவன் ஜீவ உயிரணுக்கள் – சிவ
நாமமே நமக்கு உறவினர்கள்.

(இன்று (23.11.2018) கார்த்திகை தீபத் திருநாள்.)

Related articles

Recent articles

spot_img