spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

HomeReporters Diaryகல்விச்சாலையா கலவிச்சாக்கடையா? தமிழ் இலக்கியப் படுகொலை செய்யும் திருச்சி ஜோசப் கல்லூரி நிர்வாகத்தின் மீது ஆளுநர்...

கல்விச்சாலையா கலவிச்சாக்கடையா? தமிழ் இலக்கியப் படுகொலை செய்யும் திருச்சி ஜோசப் கல்லூரி நிர்வாகத்தின் மீது ஆளுநர் நடவடிக்கை தேவை!

- Advertisement -

தமிழகத்தில் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் ஆரோக்கியமான சூழல், கல்விச் சூழல் வரவேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், திருச்சி தூய வளனார் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியச் சூழல் ஏற்பட்டுள்ளது.

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தமிழ்த் துறையின் இதழியல் பிரிவு ஏற்பாடு செய்திருக்கும் பன்னாட்டுக் கருத்தரங்கத்தால் இப்போது பெரும் பிரச்னையும் கலவரமும் ஏற்பட்டிருக்கிறது. சென்ட் ஜோசப் கல்லூரியின் நிர்வாகத்தால் தமிழ் இலக்கியங்களுக்கும் உண்மை வரலாறுக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனை, தமிழக அரசு தடுத்து நிறுத்தி, தமிழ் இலக்கியங்களின் மேன்மையைக் காப்பாற்ற முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

இதற்குக் காரணமாக அமைந்திருப்பது கல்லூரி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இதழியல் துறை ஏற்பாடு செய்திருக்கும் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கம்தான்!

திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரி… கிறிஸ்தவ கல்வி நிறுவனமான இது பாதிரியார்களால் நடத்தப்படுகிறது. அரசின் பல்வேறு சலுகைகளைப் பெற்று நடத்தப் படும் தன்னாட்சி பெற்ற கல்லூரி இது. இந்தக் கல்லூரியில்தான் மேதகு முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் படித்தார். நாட்டுக்குத் தொண்டாற்றிய விஞ்ஞானிகளையும் மேதைகளையும் உருவாக்கிய பழம் பெருமை நிறைந்த கல்வி நிறுவனம் இது. திருச்சி ஊருக்குப் பெருமை சேர்த்த பிஷப் ஹீபர் கல்லூரி, செயிண்ட் ஜோசப் கல்லூரிகளில் பயின்ற எத்தனையோ பேர் மேதைகளாகத் திகழ்ந்தனர்.

ஆனால் இன்று இந்தக் கல்லூரியில் பயின்று வெளியே வருபவர்களில் கணிசமானவர்கள், மனப் பிறழ்வு கண்டவர்களாக, சமுதாயத்தைச் சீரழிக்கும் மனநோயாளிகளாக வெளியே வருகிறார்கள் என்பதற்கு, அந்தக் கல்லூரியின் சார்பில் நடத்தப் படும் கருத்தரங்குகளே சாட்சி!

மாணவர்களின் கல்வி அறிவுக்கும் சமுதாய ஒழுங்குக்கும் படிப்பினைகளை போதிக்கும் இடங்களாக இருந்த கல்விக் கூடங்கள் இன்று மனப் பிறழ்வு கண்டவர்களின் ஆக்கிரமிப்பினால், அதே போன்ற மனப் பிறழ்வு கண்ட மாணவர்களை உருவாக்கும் இயந்திரத்தனமான மையங்களாகத் திகழ்கின்றன. அதற்கு திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியின் இந்தக் கருத்தரங்கு உதாரணம்!

அரசு சலுகை பெற்று நடத்தப் படக்கூடிய ஒரு தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமான செய்ண்ட் ஜோசப் கல்லூரியில், வரும் டிசம்பர் 6-7 தேதிகளில் ஒரு “பன்னாட்டு கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இந்தக் கருத்தரங்கில் தரப்படக் கூடிய தலைப்புகள் என்று இவர்கள் கொடுத்திருப்பவை…

“தமிழ் இலக்கிய பதிவுகளில் பெண் வன்கொடுமைகள் ”

1. தொல்காப்பியம் வரையறுக்கும் பெண் மீதான கட்டுப்பாடுகள்
2. சங்க அக இலக்கியங்கள் சித்திரிக்கும் குடும்ப வன்முறைகள்
3. சங்க இலக்கியம் சித்திரிக்கும் பரத்தையர் ஒழுக்கம்
4. சங்ககாலச் சமூகத்தில் கொண்டி மகளிர்
5. புறத்திணைகள் காட்டும் பெண் வன்கொடுமைகள்
6. சிலப்பதிகாரம் காட்டும் உரைசால் பத்தினி – மறுவாசிப்பு
7. மணிமேகலை காட்டும் கணிகையர் சமூகம்
8. சீவக சிந்தாமணி எடுத்துரைக்கும் பலதார மணமுறை
9. கம்பராமாயணத்தில்
வெளிப்படும் ஆணாதிக்க சிந்தனைகள்
10 கம்பராமாயணத்தில் சூர்ப்பனகை சந்தித்த வன்கொடுமைகள்
11. வில்லிபாரதத்தில் பாஞ்சாலி சந்தித்த ஆணாதிக்க ஒடுக்குமுறைகள்
12. தனிப்பாடல்களில் வேசியர் ஏசல்
13. நீதி நூல்கள் திணிக்கும் பெண்ணடிமை சிந்தனைகள்
14 பெண் கதை மாந்தர்கள் வழி பழங்கதைகள் கட்டமைக்கும் பெண்ணடிமைத்தனம்
15. சமயங்கள் மறுக்கும் பெண்ணின் அடையாளங்கள் பெண்ணின்
16 உலா இலக்கியங்கள் கட்டமைக்கும் காமம்
17. நாட்டுப்புறப் பாடல்களில் காணலாகும் பெண்ணடிமை சிந்தனைகள்
18 குறவஞ்சி இலக்கியங்கள் வெளிப்படுத்தும்
19 பெண்களை பழித்துரைக்கும் பட்டினத்தார் பாடல்கள்
20 மாதவையாவின் முத்து மீனாட்சி புதினம் சித்தரிக்கும் பெண் வன்கொடுமைகள்
21. புதுமைப்பித்தனின் “பொன்னகரம்” கேள்விக்குள்ளாகும் கற்புக் கோட்பாடு
22. தி.ஜானகிராமனின்
“மரப் பசு” புதினத்தில் பெண் சுதந்திரம்
23 . ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் கண்டிக்கும் பாலியல் வன்முறை
24. வைரமுத்துவின் கவிதைகளில் முதிர்கன்னிகள் குறித்த பதிவுகள்
25 சோலை சுந்தரபெருமாளின் செந்நெல் சித்திரிக்கும் பெண் தொழிலாளிகள் மீதான வர்க்க ஒடுக்குதல்கள்

இப்படி 25 மாதிரித் தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடப் பட்டிருக்கிறது. இந்த மாதிரித் தலைப்புகளில் கடந்த நவ.10ம் தேதி கட்டுரைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் என்று சொல்லி, கட்டுரைகளும் பெறப் பட்டிருக்கின்றன.

குறிப்பாக, மாதிரித் தலைப்புகளின் பொருண்மையில் மட்டுமே கட்டுரைகள் வழங்கப் பட வேண்டும் என்றும், பெண்ணின் பெருமைகள் பற்றி எழுதும் கட்டுரைகள் ஏற்கப் பெற மாட்டாது என்றும் தெளிவாகக் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

கட்டுரைகளை வேண்டிப் பெறும் விளம்பரப் படிவத்தில் கொடுக்கப் பட்டிருப்பவை தமிழார்வலர்களுக்கு அதிர்ச்சியை அளித்திருக்கின்றன…

கல்லூரி குறித்த அறிமுகத்தில், இந்திய திருநாட்டில் தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளியில் நூற்றாண்டு காலமாக கல்விப் பணி ஆற்றி வருகின்ற கல்லூரி இது என்றும், உண்மைக்கும் நன்மைக்கும் என்னும் விருதுடன் 175 ஆவது அகவையில் கல்வி சேவை புரிந்து வருகின்ற கல்லூரி என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

தமிழக சேசு சபையினரால் (கிறிஸ்துவ சபையால்) நடத்தப்படுகின்ற இந்தக் கல்லூரி, பல்கலைக்கழக மானியக்குழுவால் ஆற்றல் வளத் தனித் தகுதியும், தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் மூன்றாம் சுற்று ஏ தரத் தகுதியும், சிறப்பு தொன்மைத் தகுதியும் பெற்றுள்ளது என்று பெருமை பேசுகிறது. இப்படி எல்லாம் தலைப்புகளில் மாணவர்களை உருவாக்கி அளிக்கும் கல்லூரிக்கு இத்தனை தரத் தகுதிகள் ஏற்புடையதா என்பது மறுவாசிப்புக்கு உட்பட்டது என்றே கருத இடம் அளிக்கிறது.

“இத்தகு பெருமைமிகு கல்லூரியில் நூல்களை வெளியிடுவதிலும் கருத்தரங்குகளை நடத்துவதிலும் ஆய்வுகளை மேற்கொள்வதிலும் செயல்படுகின்ற தமிழாய்வுத்துறை ஆண்டுதோறும் தேவைக்கேற்ப பயனுள்ள தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்தி வருகின்றது. இத்தகைய ஆய்வு போக்கினை மேலும் பலப்படுத்தும் நோக்கில் தமிழாய்வுத்துறை தமிழ் இலக்கிய பதிவுகளின் வன்கொடுமைகள் என்னும் பொருண்மையில் 6 7 டிசம்பர் 2018 இரு நாள்களில் கருத்தரங்கத்தை நடத்த திட்டமிட்டுள்ளது

“கருத்தரங்கின் நோக்கம் வேதகாலம் தொடங்கி இன்றுவரை ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம நிலை தொடர்கிறது. அதனால் வலிமையான ஆண்கள் வலிமையற்ற பெண்களை வன்செயல்களால் துன்புறுத்துகின்றனர். ஆண்களைவிட கீழ்நிலைக்கு பெண்களை தள்ளும் இக்கட்டான சமுதாய செயல்பாடுகளில் ஒன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் உலகமெங்கும் நிகழ்ந்து வருகின்றன. உலகில் மூன்று பெண்களில் ஒருவர் தனது வாழ்நாளில் அவர் கூறுகையில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனர் வன்கொடுமைகள் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு முறைகளில் கட்டாயப்படுத்துதல் பெண் சிசுக்கொலை கருக்கலைப்பு கௌரவக்கொலை வரதட்சனை கைக்கூலி மரணம் கடத்தி கட்டாய திருமணம் குழந்தை மனம் கொடுமை போர்க்காலத்தில் பெண்களுக்கான கொடுமைகள் காவல்துறை மற்றும் அதிகார வர்க்கத்தினரால் வன்கொடுமைக்கு உட்படுத்தி போராட்டத்தில் அடக்குமுறையை கையாளுதல் கட்டாய பாலியல் தொழில் போன்ற கொடுமைகள் நிகழ்கின்றன

“பிறப்பிற்கு முன்னும், மழலைப் பருவம், சிறுமியர், வளர்ந்த வயது வந்தோர் ஆகிய நிலைகளிலும் வன்கொடுமைகள் அரங்கேறுகின்றன

ஆகவே இந்த பொருண்மைகளில் எழுதவும் விவாதிக்கவும் செயல்படும்போது ஓரளவிற்கு பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளிலிருந்து மீட்டெடுப்பு செய்யலாம். இக்கருத்துகளின் அடிப்படையில் ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன மாதிர்த் தலைப்புகள் இங்கே தரப்பெற்றுள்ளன. தலைப்பின் பொருண்மையில் மட்டுமே கட்டுரைகள் வழங்குமாறு வேண்டுகிறோம். பெண்ணின் பெருமைகள் பற்றி எழுதும் கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டாது… என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

மேற்கண்ட கருத்துகள் எல்லாம் மறுவாசிப்பும் மறுமுறைவாசிப்பும் செய்யப் பட வேண்டியவை! பிறப்பிற்கு முன்னும் வன்கொடுமை என்பது விவிலியத்தில் கூறப்பட்டுள்ள பாவத்தின் சம்பளமான மரணத்தின் சம்பளமான மறுபிறப்பு என்று இவர்களுக்குக் கற்றுத் தந்தவர்கள் எடுத்துக் கொடுத்தது என்றுதான் தோன்றுகிறது.

மேலும், இந்தக் கட்டுரைகள், ஆய்வியல் நிறைஞர் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பும்போது நெறியாளரிடம் கையொப்பம் பெற்று செம்மையாக்கம் செய்து அனுப்ப வேண்டும் என்றும், கட்டுரைகள் மின்னஞ்சலில் அனுப்பிய கட்டுரையாளர்கள் உறுதிசெய்துகொள்ள வேண்டும் என்றும், கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு கருத்தரங்க தொடக்க விழாவில் அச்சு வடிவில் நூலாக வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளதால், இந்தக் கட்டுரைகள் நூலாகி வருவதும் தெரியவருகிறது.

இந்த அவலத்தைக் கேட்பதற்கும் வாசிப்பதற்கும், பதிவு கட்டணம் ரூபாய் 700, ஆய்வு மாணவர் ரூ.400, பங்கேற்பாளர் ரூ.250, அயல்நாட்டு கட்டுரையாளர் 15 டாலர் என்று விலை நிர்ணயம் வேறு!

இது குறித்து, ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் கூறியபோது…

இந்தத் தலைப்புகளைப் படித்தவுடனே ஏதோ பெரிய கலவரம் செய்தது போலவே இருக்கிறது. 19 -1, 2 வது அரசியலமைப்பு சட்ட பிரிவின்படி இவர்களின் மீது நடவடிக்கை எடுக்கலாம். இதுபோல இலக்கியத்தின் மதிப்புகளை சமுதாயத்தின் பொது மக்களை பொது ஒழுங்குகளை சீரழிக்கும் உள்நோக்கத்துடன் செயல்படுபவர்களுக்கு தகுந்த நடவடிக்கையை அரசியல் அமைப்பு சட்டம் எடுக்கச் சொல்கிறது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தக் காலகட்டத்தின் சமுதாய மதிப்பு மரபு மரபு மாற்றம் இவை எல்லாம் இருக்கும். இன்று நாம் வாழும் வாழ்க்கையைப் பார்த்து விட்டு, அன்றைய வாழ்க்கைச் சூழலை அசைபோடக் கூடாது. இன்றைய சூழலை வைத்துக் கொண்டு அன்றைய மாந்தர்களின் வாழ்க்கையைப் பார்க்கக் கூடாது. ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். மரபு, மரபு மாற்றம் புதிய சிந்தனைகள் காலத்திற்கு ஏற்றவாறு சமுதாயம் தன்னை மாற்றிக் கொண்டிருக்கும்,,,

இன்றைய சமுதாயத்தை வைத்துக்கொண்டு அன்று இலக்கியங்களை வாசிக்க கூடாது. எனவே இது வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் செய்யக் கூடிய விஷயமாக தோன்றுகிறது. அன்றைய மாந்தரின் வாழ்க்கையை இலக்கியம் காட்டியபடி சொல்வது வேறு… இதுபோன்ற விஷயங்களை அதாவது… நம் சமுதாயத்தையே இழிவுபடுத்துவது போல் பேசுவது வேறு

இந்த தலைப்புகள் எல்லாமே நம்மை நாமே இழிவு படுத்திக் கொள்வது போல் இருக்கிறது நம்மை நாமே அவமானப்படுத்திக் கொள்வது போல் இருக்கிறது, இது சமய இலக்கியங்கள் காப்பியங்கள் என்று இல்லாமல் தமிழ் இலக்கியங்களை ஒட்டுமொத்தமாக இழிவுபடுத்துவது போல் இருக்கிறது என்பதுதான் என்னுடைய கருத்து. ஒரு வாசிப்பு என்று இல்லாமல் மறுவாசிப்பு வேறு செய்கிறார்கள்! ஒரு வாசிப்பே ஒழுங்காக செய்யாதவர்கள் எல்லாம் மறுவாசிப்பு செய்வது, அவர்களின் உள்நோக்கத்தையே வெளிப்படுத்துகிறது.

கிறிஸ்துவ இலக்கியங்கள் இங்கே தோன்றின. தேம்பாவனி, ரட்சனிய யாத்ரீகம் போன்றவை. அவர்கள் தமிழுக்கு தொண்டு செய்தார்கள். இன்று இந்த கிறிஸ்தவர்கள் தமிழுக்கு மண்டு செய்கிறார்கள்.

எனவே இந்தக் கருத்தரங்கை எப்படியாவது தடுத்து நிறுத்தியாக வேண்டும்! இந்தக் கருத்தரங்கு நடத்தப் படக்கூடாது! அரசியலமைப்பு சட்டப்படி நமக்கு கொடுத்திருக்கக்கூடிய உரிமைகளில் பேச்சுரிமை என்பது ஒன்று. 19, 1ன் கீழ் பத்திரிகை சுதந்திரம் ஒன்று. 19 2ன் அடிப்படையில் பொது அமைதியைக் கெடுப்பதும் சமூக ஒழுங்கை கெடுப்பதும், மரபுகள், இலக்கியங்களை இழிவு படுத்துவது போலும் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.

சமூக அமைப்புக்கு, நம் தமிழ்மொழிக்கு, தமிழ் இலகியங்களுக்கு என எல்லா நிலைகளிலும் இது இழிவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது. எந்த சங்க இலக்கியங்களிலும் பெண்களை இழிவு படுத்தவில்லை. பிசிராந்தையார் தன் மனைவியை மாண்புமிகு மனைவி என்றே பெருமைப் படுத்துகிறார். அன்றைய சமூக அமைப்பு எப்படி இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? அவர்களின் வழிபாடு, அவர்களின் நம்பிக்கைகள், நடைமுறை என்பதெல்லாம் இவர்களுக்குத் தெரியுமா?

நம் பண்டைத் தமிழ் அடையாளங்களை அழிப்பது போன்ற, நமது மதிப்பீடுகளை அவமதிப்பது போன்ற தலைப்புகளை இவர்கள் கொடுத்திருக்கிறார்கள். ஒரு தமிழ்ப் பேராசிரியராக எனக்கு சூட்டைக் கிளப்புகிறது இது … என்று சொல்லி முடித்தார் அந்த ஓய்வு பெற்ற பேராசிரியர்.

இது குறித்து கல்லூரியில் சிலரிடம் விசாரித்த போது, கல்லூரி ரெக்டரான ஃபெர்னாண்டோவுக்கே இவர்களின் செயல்பாடுகளில் உடன்பாடு இல்லாமல் ஒதுங்கித்தான் இருக்கிறார். தமிழ்த் துறையினை குறிப்பிட்ட வகுப்பினர் சிலர் கைப்பற்றிக் கொண்டு, அடாவடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் செயல்பாடுகளில் இங்குள்ள பாதிரியார்களுக்கே விருப்பம் இல்லை. ஆனால், அப்படி ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பது போல் ஏதாவது செய்ய வேண்டும் என்று நாங்களே நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்கிறார்கள்.

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி, பாரதிதாசன் பல்கலையின் கீழ் வரும் தன்னாட்சி பெற்ற கல்லூரி, இருந்தாலும் பாரதிதாசன் பல்கலை மற்றும் ஆளுநரின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட கல்லூரிதான். எனவே, ஆளுநருக்கு இதன் மீது அதிகாரம் உள்ளது. ஆளுநர் உடனே இந்தக் கல்லூரியின் முதல்வரிடம் இது போன்ற நடவடிக்கைகளுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும். பல்கலை., துணை வேந்தரை அழைத்து இப்படிப்பட்ட சமூகவிரோதக் கருத்துகள், கல்வி என்ற பெயரில் பரப்பப் படுவதை அனுமதிக்கக் கூடாது என்று சொல்ல வேண்டும். இந்தக் கல்லூரிக்கான மானியம் பல்கலைக்கழக மானியக்குழுவில் இருந்து வந்தாலும்கூட சம்பளம் எல்லாமே தமிழக அரசின் கீழ் வருகிறது. உயர் கல்வி, பண்பாட்டுத் துறை அமைச்சர்கள் இவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இலக்கியத்துக்கும் தமிழுக்கும் வன்கொடுமை செய்யும் இவர்களைப் போன்றவர்களால் உயர்கல்வித் துறையும் சமுதாய ஒழுங்கும் சீர்கெடுவதற்கு மாநில அரசு அனுமதிக்கக் கூடாது என்றே நமக்குத் தோன்றுகிறது.

இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ராம.ரவிக்குமார் இந்தப் பிரச்னையைக் கையில் எடுத்துக் கொண்டு, சமூகப் பெரியவர்கள் சிலரை அணுகியிருக்கிறார். அவர் இது குறித்து தெரிவித்த போது…

மேற்படி கல்லூரி நிர்வாகம் இந்து சமய இலக்கியங்களை கம்பராமாயணத்தை வாழ்வியல் தத்துவங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு தவறான வரலாறுகளை ஆய்வுக்கட்டுரைகளாக சமர்ப்பிக்கச் செய்து அதை ஆவணப்படுத்த முயற்சிக்கிறது. இது இலக்கியத்தில் எழுத்து பயங்கரவாதத்தை விதைப்பது. உண்மை வரலாறுகளை அழிக்கக்கூடிய வேலையை இந்தக் கல்லூரி நிர்வாகம் செய்து வருவது வன்மையாக கண்டிக்கத் தக்கது.

நிச்சயமாக இது மத மோதலை உருவாக்கும். ஒரு இந்து தன்னாட்சி பெற்ற கல்லூரி நிர்வாகம் உதாரணத்திற்கு மறுவாசிப்பு என்ற பெயரில், பைபிளில் பெண்ணடிமைத்தனம்,
இயேசு இறப்பில் சந்தேகம்
கன்னிமரியாள் எப்படி கருத்தரித்தாள்?
பாதிரியார்களின் லீலைகள்,.
திருச்சபைகளில் வரக்கூடிய பெண்களுக்கு ஆபத்து ,
பாவமன்னிப்பு என்கின்ற பெயரில் கற்பழிப்பு
– இப்படி பல்வேறு தலைப்புகளில் விவாதப் பொருளாக மாற்றி ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தால் தமிழக அரசு வேடிக்கை பார்க்குமா? வேடிக்கை பார்க்காது தானே.

செயிண்ட் ஜோசப் கல்லூரி தமிழ்த் துறை வெளியிட்ட கட்டுரைத் தலைப்புகளுக்கு போட்டியாக… சமூக ஊடகங்களில் உலா வரும் போட்டித் தலைப்புகள்…

அப்படி இருக்கையில் இப்படி ஒரு அகில உலக கருத்தரங்கை திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? வந்தது.

இதுபோல் மதமோதல்களை உருவாக்கக் கூடிய வகையில் கருத்தரங்கம் நடத்த கூடிய இந்தக் கல்லூரிக்கு அரசாங்கம் எப்படி நிதி உதவி செய்யலாம்?

இந்த மாநாட்டு கருத்தரங்கு ஏற்பாட்டாளர்களை பாருங்கள் ஓரிருவரைத் தவிர மற்ற அனைவருமே கிறிஸ்தவர்கள் பாதிரிகள். அன்னைத் தமிழைக் காக்க வேண்டுமென்று அனுதினமும் பாடுபடக்கூடிய அறிவுலக பெருமக்கள், தமிழ் ஆர்வலர்கள், இலக்கிய பெருமக்கள், இந்து உணர்வாளர்கள் அனைவரையும் இந்தக் கருத்தரங்கை நிறுத்துவதற்கும், இந்தக் கல்லூரியின் மீது நடவடிக்கை எடுக்கவும் வழி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தவறான வரலாற்று பதிவை, புனைவுக்கதைகளை ஆவணப்படுத்த முயற்சிக்கும் இந்த அயோக்கியத் தனத்தை முறியடிக்க அனைவரும் அணிதிரள வேண்டும். அதற்காக, தமிழக அரசு, தமிழக ஆளுநர், தமிழக முதலமைச்சர், கல்வி அமைச்சர், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி, கல்வி இயக்குனர், பல்கலை துணை வேந்தர் ஆகியோர் தலையிட்டு உடனடியாக இந்தக் கருத்தரங்கத்தை தடுத்து நிறுத்துவதற்கு உரிய வழிமுறைகளை செய்ய வேண்டுகிறோம்.

இவர்களுக்கு தமிழ் ஆர்வலர்கள், உணர்வாளர்கள் கடிதங்கள் மற்றும் மனுக்கள் புகார்களைக் கொடுக்க வேண்டும் என்று கோருகிறோம். இல்லை என்றால் தமிழகத்தில் மத மோதல்களை உருவாக்குவதற்கு இந்த கருத்தரங்கம் ஒரு காரணமாக அமைந்துவிடும் என நாங்கள் அஞ்சுகிறோம் என்று கூறினார்.

ஒரு துறையில் இருந்து இப்படி ஒரு கருத்தரங்கம் நடத்த வேண்டுமானால், கல்லூரி முதல்வர் அனுமதி வேண்டும். பணம் வசூலித்து ஒரு கருத்தரங்கை நடத்த கல்லூரியின் ஆட்சிக்குழு அனுமதி கொடுக்க வேண்டும். இது அரசு பணமாக இல்லாமல், தனியாரிடம் பெற்று ஒரு கருத்தரங்கு நடத்தினாலும் கூட! அதுபோல், பன்னாட்டு கருத்தரங்கு என்ற பெயரில், வெளிநாட்டில் இருந்து நபர்களை வரவழைத்து டாலரில் பெணம் பெற வேண்டுமானால், கல்லூரிக் கல்வி இயக்குநர் அனுமதி
வழங்க வேண்டும். இவை எல்லாம் இந்த விவகாரத்தில் கடை பிடிக்கப் பட்டதா? அப்படி என்றால், இந்தக் கருத்தரங்கத்தினால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு, மேற்கண்ட ஒவ்வொருவருமே பொறுப்பாளி ஆவார்கள்!

சிறந்த கல்வி மையங்களாக இருந்த கல்லூரிகள் இன்று பண்பாட்டுச் சீரழிவில் சிக்கிக் கொண்டிருப்பது, தமிழக உயர் கல்வித் துறைக்கு மிகப் பெரும் இழப்புதான்!

செயின் ஜோசப் கல்லூரியின் வலைத்தள முகவரி:  https://www.sjctni.edu/contacts.jsp

10 COMMENTS

 1. திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரி கிறிஸ்தவ கல்வி நிறுவனம் , இவர்களிடம் பேசினேன் (பெயர் சூசை, பேராசிரியர், தமிழ் துறை )

  அவர்கள் தமிழ் காப்பியங்களில் இருக்கும் பெண் அடிமைத்தனம் பற்றி ஆய்வு கட்டுரை போட்டி நடத்த போகிறார்களாம்… அப்படிதான் நடத்துவார்களாம்… கட்டுரையின் விளக்கம் அது எழுதிய நபர்களிடம்தான் கேட்க வேண்டுமாம்…

  கட்டுரையின் கருத்துக்கும், இந்த கல்லூரிக்கும் சம்பந்தம் கிடையாதாம் …1992 முதல் நடத்தி கொண்டு இருக்கிறார்களாம்.. நாம் இதை மத சாயம் பூசி பார்க்க கூடாதாம்… யாரு வேண்டுமானாலும் 700 ருபாய் பணம் கட்டி கட்டுரை எழுதி கொடுக்கலாம் மாம் … ஆனால் தலைப்பு அவர்கள் கூறியது மட்டும்தானாம்… (என்ன ஒரு வில்லத்தனம் )

  இந்து இயக்கங்கள் இதில் இறங்கி இவர்களை வெளுக்க வேண்டும்… என்ன செய்ய போகிறார்கள் இந்து இயக்கங்கள் …

  யாராவது ஒரு வக்கீல் ஒரு புகார் எழுதி கொடுங்க… சட்ட பிரிவொடு… காவல்துறைக்கு எல்லோரும் புகார் அனுப்புவோம்.. சட்டப்படி இவர்களை ஒடுக்க வேண்டும்…

  ஏன் பைபிளில் இருக்கும் காம களியாட்டங்களை எல்லாம் பேசுவது இல்லை என்று கேட்டேன்.. அதுக்கு அவர் கூறிய பதில் … பைபிள் தமிழ் இலக்கியத்தில் வராதாம்… நாம் பரிந்துரைக்கும் ஆய்வு கட்டுரை… தலைப்புகளை இதில் இணைத்துள்ளோம்… இதை பற்றி எல்லாம் பேசுவார்களா ?

  வாருங்கள் … எல்லோரும் ஒன்று சேர்ந்து இவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம்…

  தமிழ்த்துறை தொலைபேசி எண் 0431-4226401

  கல்லூரியின் இணையதளம் http://www.sjctni.edu/

 2. உயர் கல்வித்துறை மூலம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கல்லூரிக்கு அரசு தரும் உதவிகளையும் நிறுத்த வேண்டும். அன்புடன் இலக்குவனா் திருவள்ளுவன், தமிழேவிழி! தமிழா விழி!

 3. மதிப்பிற்குரிய இலக்குவனர் திருவள்ளுவன் அவர்களுக்கு வணக்கம். ஐயா, இந்த விசயத்தில் இக் கல்லூரியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன். தயவு கூர்ந்து விளக்கம் அளிக்கவும்.
  நன்றிகளுடன்,
  விஜயகுமார்.

 4. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.கல்வி துறையில் பல முன்னேற்றங்களை செய்துவரும் கல்வி அமைச்சரும் AIADMK அரசும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .

 5. தலைப்பே விளக்கம் தான்.புரியவில்லை எனில் கல்லூரியின் தமிழ் துறையின் கட்டுரையின் தலைப்புகளை கவனிக்கவும்

 6. இந்த பதிவின் நோக்கம் மதம் / அரசியல் சார்ந்தவை அல்ல.

  1. தமிழ் இலக்கிய வரலாறு மீது தவறான கருத்துக்கள் சொல்வதை தடுப்பது.

  2. நாம் நாட்டில் வாழ்ந்த மற்றும் தற்போது வாழ்ந்து கொண்டு இருக்கும் பெண்களை தவறான கருத்துடன் இணைத்து பேசுவதை தடுப்பது.

  மேலும் இதைப் பற்றி எழுதியுள்ள இணைய கட்டுரை பாருங்கள் உங்களுக்கு புரியும். நான் சொல்ல நினைப்பதை, நாம் இதற்கு கூட கோபம் வரவில்லை என்றால் நாம் தமிழ் அன்னையின் பிள்ளைகளே இல்லை வருத்தத்துடன் பதிவை நிறைவு செய்கிறேன்.

  இவன்
  மானம் உள்ள தமிழன்.

  https://dhinasari.com/featured/62188-mass-campaign-against-trichy-saint-joseph-college-atrocitiies-degrading-tamil-literatures.html

 7. 1. தமிழ் இலக்கிய வரலாறு மீது தவறான கருத்துக்கள் சொல்வதை தடுப்பது.

  2. நாம் நாட்டில் வாழ்ந்த மற்றும் தற்போது வாழ்ந்து கொண்டு இருக்கும் பெண்களை தவறான கருத்துடன் இணைத்து பேசுவதை தடுப்பது.

  மேலும் இதைப் பற்றி எழுதியுள்ள இணைய கட்டுரை பாருங்கள் உங்களுக்கு புரியும். நான் சொல்ல நினைப்பதை, நாம் இதற்கு கூட கோபம் வரவில்லை என்றால் நாம் தமிழ் அன்னையின் பிள்ளைகளே இல்லை வருத்தத்துடன் பதிவை நிறைவு செய்கிறேன்.

  இவன்
  மானம் உள்ள தமிழன்.

 8. இவர்கள் நோக்கம் ஆய்வுதான் என்றால் கிறித்துவ இலக்கியங்களை ஏன் ஆய்விற்கு உட்படுத்தவில்லை,
  இது குறித்து மேலும் அறிய < தமிழ் இலக்கியங்களை இழிவு படுத்தும் சூசையப்பர் கல்லூரி >
  என்னும் தலைப்பில் அகரமுதல மின்னிதழில் நான் எழுதியுள்ள கட்டுரையைப் படியுங்கள்.
  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! தமிழே விழி! தமிழா விழி!

 9. I did my pulavar exam in Tamil literature. Tamils did not have castes and worshipped only nature. No where Ladies were denigraded. தயவுசெய்து do not misquote world’s oldest yet young Language.எம்போன்ற புலவர் மக்கள் சாகவில்லை . எதை கேட்டும் வடக்கு irukkavilai

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,163FansLike
386FollowersFollow
91FollowersFollow
0FollowersFollow
4,902FollowersFollow
17,200SubscribersSubscribe