கள்ளக்காதலி பிடியில் இருக்கும் கணவனை மீட்டுத் தரக்கோரி பெண் மனு!

Published:

kanyakumari majitha petition - 2026

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட அதிமுக எம்ஜிஆர் மன்ற தலைவரான ஷாகுல் ஹமீது என்பவர் கள்ளக் காதலியிடன் சேர்ந்து தனது சொத்துக்களை அபகரித்து கொண்டதாகவும், இது குறித்து குளச்சல் காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றால் அதிமுக வினரின் தூண்டுதலின் பேரில் தன்னையும், தனது மகளையும் விபசார வழக்கில் கைது செய்து விடுவதாக போலீசார் மிரட்டுவதாகவும், உரிய விசாரணை நடத்தி தனது கணவரை மீட்டு தரக் கோரியும் பாதிக்கப்பட்ட பெண் மாஜிதா (45) என்பவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் ஐ சந்தித்து புகார் மனு அளித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டனம் பகுதியை சேர்ந்தவர் மாஜிதா(45). இவருக்கும் குளச்சல் பகுதியை சேர்ந்த அதிமுக எம்ஜிஆர் மன்ற தலைவர் சாகுல் ஹமீது என்பவருக்கும் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது, அப்போது மாஜிதா பெயரில் இருந்த சொத்துக்கள் அனைத்தும் அவரது கணவர் சாகுல் ஹமீது பெயரில் எழுதி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ஐசத் பீவி என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்படுத்தி கொண்ட சாகுல் தனது மனைவியிடம் இருந்த நகைகள் மற்றும் சொத்துக்கள் உட்பட அனைத்தையும் வாங்கி கொண்டுவிட்டாராம். தற்போது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து கள்ளக் காதலியுடன் வாழ்ந்து வருகிறார் என்றும், இது தொடர்பாக மாஜிதா குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அப்போது அதிமுகவினரின் தூண்டுதலின் பேரில் காவல் நிலைய பெண் ஆய்வாளர் பொன்கீதா தன்னையும் தனது மகள்களையும் விபச்சார வழக்கில் கைது செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த மாஜிதா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத்தை சந்தித்து உரிய விசாரணை மேற்கொண்டு கள்ளக் காதலி பிடியில் இருக்கும் தனது கணவரை மீட்டு தர கூறியும், தன்னை மிரட்டிய குளச்சல் காவல் நிலைய பெண் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோரிக்கை மனு அளித்தார்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

Related articles

Recent articles

spot_img