“கச்சா எண்ணெய் விலை குறைப்புக்கு காரணம் டிரம்ப் மட்டுமில்லை, இந்திய பிரதமர் மோடியும் காரணம். இந்திய வாடிக்கையாளர்கள் சார்பில் பலமுறை அழுத்தம் கொடுத்தார்” என்று கூறியுள்ளார் சவுதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சர் காலித் அல்-ஃபாலஹ்.

சர்வதேச அரங்கத்தில் அமெரிக்க அதிபரையும் இந்திய பிரதமரையும் ஒரே தட்டில் வைத்து பேசியுள்ளார். இது குறித்து அவர் ஒரு கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில், கச்சா எண்ணெய் விலை குறைவதற்கு யார் காரணம்? டிரம்ப் தான் காரணமா? என்று கேட்கப் பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், டிரம்ப் அவர் நாட்டு மக்களுக்கு பாதிப்பு வராமல் பார்த்துக் கொண்டார். அதுபோல் பிரதமர் மோடியும், ஜி20 நாடுகள் மாநாட்டில் என்னை தனிப்பட்ட முறையில் சந்தித்து, இந்திய நுகர்வோர் பாதிக்கப் படாமல் இருக்க கடும் அழுத்தம் கொடுத்தார். அவரை 3 முறை சந்தித்திருக்கிறேன். அவருக்கும் செல்வாக்கு இருக்கிறது! என்று கூறியுள்ளார்.

Question: The Crude is down right now. Is it because of Trump?

Answer by Khalid Al-Falih, Minister of Energy of Saudi Arabia: Well, President Trump is the President of the largest (oil) consuming country at the moment. 20% of global consumption. The consumer in the US is just like a consumer in France, just like a consumer in India, just like a consumer in Saudi Arabia – want affordable energy. So, Trump has the right to wish for affordability for the citizens of the US and he is very vocal, using his favorite communication tool which is Twitter. And we hear him and we take his views seriously. We also take the views of Prime Minister Modi who is equally vocal. I just met with him in Buenos Aires (G20) and privately he made those points of view very very strongly that he does care for the Indian consumers . I have seen him 3 times in India. He was also very vocal.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...