17 June11 Rahul gandhi - 2026

மத்திய பிரதேசத்தில்சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கிறது காங்கிரஸ்.

230 தொகுதிகள் கொண்ட ம.பி-யில் காங்கிரஸ் 114 தொகுதிகளில் வெற்றி. 3 சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடிவு செய்துஉள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக சுயேட்சையாக களம் இறங்கி வெற்றிபெற்ற 3 எம்.எல்.ஏ-க்கள் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 முன்னதாக மத்திய பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில்.. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை!

மத்திய பிரதேசத்தில் இரண்டாவது நாளாக இன்றும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து முடிந்துள்ளது. காங்கிரஸ் 114 தொகுதிகளை வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 109 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

ஆரம்பம் முதலே பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. சில நேரங்களில் பாஜக, காங்கிரசை விட அதிக தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாகவும் சில நேரங்களில் பாஜகவைவிட, காங்கிரஸ் முன்னிலை வகிப்பதாகவும் டிரெண்ட் மாறி மாறி மாறி கொண்டு இருந்தது.

ஒரு கட்டத்தில் காங்கிரஸ் தனிப்பெரும் பான்மைக்கான இடங்களைப் பிடிக்க முடியாவிட்டாலும் தனிப்பெரும் கட்சியாக உருவாகும் சூழ்நிலை காணப்பட்டது. இருந்தாலும் கூட இந்த டிரெண்ட்டை நம்ப முடியாது என்பதால், யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற பரபரப்பு நீடித்துக்கொண்டு இருந்தது.

ஆனால் நள்ளிரவு வரை அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ஆட்சி அமைக்க உரிமை கோர முடியாத நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது.

இதனிடையே இன்று காலையிலும் கூட வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்தது. காலை 8 மணிக்கு, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புபடி, ஒரு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதாக கூறப்பட்டது. காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது.

காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சி 109 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி இரண்டு தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி ஒரு தொகுதியில், சுயேச்சைகள் நான்கு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

எனவே, ஆட்சி அமைக்க காங்கிரஸ் உரிமை கோருகிறது.. பெரும்பான்மையை நிரூபிக்க 116 இடங்கள் தேவை என்பதால் எஞ்சிய இரு உறுப்பினர்களின் ஆதரவை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து பெறுவதற்கான முயற்சியை காங்கிரஸ் தலைமை மேற்கொள்வதாகக் கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸில்  இருந்து சென்று சுயேச்சை ஆக வென்ற 3 பேரும் ஆதரவளிப்பதாக  கூறியுள்ளனர்  எனவே காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளது



ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending