27ஆம் தேதி கன்யாகுமரி வேங்கடேஸ்வர ஸ்வாமி கோயில் கும்பாபிஷேகம்..!

ttd devastanam - 2026

27ம் தேதி கன்னியாகுமரியில் ரூ 2.50 கோடியில் வெங்கடேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் நான்கு மாட வீதி 1,380 கண்காணிப்பு கேமரா கீழ் கொண்டு வரப்படும் என்று கூறினார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் இருந்து குறைகள் , ஆலோசனைகள், கருத்துக்களை கேட்கக்கூடிய டயல் யுவர் இ.ஓ. நிகழ்ச்சி இன்று திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால்… இந்த மாதம் ஜனவரி 8 மற்றும் 22ம் தேதிகளில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தரிசனத்தில் இரண்டு நாட்களுக்கு 8 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். 9

மற்றும் 23ம் தேதிகளில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பெற்றோர்களுடன் சுபதம் நுழைவாயில் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த மாதம் 27ஆம் தேதி கன்னியாகுமரியில் 2.50 கோடி ரூபாயில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டப்பட்டுள்ள வெங்கடேஷ்வர சுவாமி கோவில் திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

மார்ச் 13-ஆம் தேதி ஐதராபாத்தில் மாதிரி கோவில் திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில் உள்ள கோதண்டராம சுவாமி கோவிலில் 100 கோடி ரூபாய் செலவில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருப்பதி மற்றும் அதனை சுற்றியுள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவில் ,அப்லாயகுண்டா பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் சுவாமி கோவிலில் நடைபெறும் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் பக்தர்கள் பெரும் விதமாக வைக்கப்பட்டுள்ளது.

ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சேவை செய்யக்கூடிய ஸ்ரீவாரி சேவா தன்னார்வத் தொண்டர்களுக்கு குலுக்கல் முறையில் அவர்கள் சேவை புரிவதற்கான பணி இடம் தேர்வு செய்யப்பட்டு ஒதுக்கப்படுகிறது.

வம்ச பாரம்பரிய அர்ச்சகர்கள் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் இருவேறு தீர்ப்புகளை வழங்கி உள்ளது அவற்றை கருத்தில் வைத்துக்கொண்டு விரைவில் நடைபெறும் அறங்காவலர் குழு கூட்டத்தில் உரிய முடிவு எடுக்கப்படும்.

ஏழுமலையான் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள நான்கு மாடவீதிகளில் 280 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வரும் ஆறு மாதங்களில் மேலும் 1100 சிசிடிவி கேமராக்கள் பெருத்தப்பட்டு கண்காணிப்பு கேமராவின் கீழ் கோயில் மற்றும் நான்கு மாட வீதி கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்தார்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Topics

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

Entertainment News

Popular Categories