
அனுமன் ஜெயந்தியையொட்டி புகழ் பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு இன்று (5.1.19) காலை ஒரு லட்சத்து எட்டு வடைகள் கொண்ட மாலை சாற்றப்பட்டது.
முன்னதாக, அனுமனுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. அனுமனுக்கு நடைபெற்ற திருமஞ்சனத்தை பக்தர்கள் பலர் தரிசித்தனர். அனுமத் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல்லில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

ஸ்ரீரங்கத்தில் இருந்து பக்தர்கள் வந்திருந்து கடந்த நான்கு நாட்களாக அனுமனுக்கான வடைமாலைகள் தயார் செய்தனர்.
இன்று அனுமனுக்கு ஒரு லட்சத்து எட்டு வடைமாலைகள் சாற்றப்பட்டிருந்த காணொளிக் காட்சி…