ஷேம்.. ஷேம்… ஷேம்ஃபுல்…! மோடிக்கு பதில் கொடுக்கும் விதத்தில் சிபிஐ(எம்) டிவிட்கள்!

இந்தியா புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
cpim - 2026

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்திய இடதுசாரி அரசை மோடி விமர்சித்தது படுகேவலம் என்று சிபிஐ(எம்) வரிசையாக டிவிட்களைப் போட்டு வருகிறது.

கேரளத்தில் இன்று கொல்லம் பைபாஸ் சாலை திறப்பு விழாவில் பங்கு பெற்ற மோடி, பின்னர் சபரிமலை விவகாரம் குறித்து காட்டமான கருத்துகளைத் தெரிவித்தார்.

அப்போது அவர், சபரிமலை விவகாரத்தில் கேரள கம்யூனிஸ்ட் அரசு கையாண்ட விதமும் அதன் செயல்பாடும் வரலாற்றில் படுமோசமானது, படு கேவலமானது என்று கூறியிருந்தார். ஷேம்ஃபுல் என்று அவர் கூறிய வார்த்தைக்கு பதில் கொடுக்கும் விதமாக, மோடிதான் ஷேம்புல் பிஹேவியர் என்று டிவிட்டர் பக்கத்தில் கருத்துகளைத் தெரிவித்து வருகிறது சிபிஐ எம்.

சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்திய கேரள கம்யூனிஸ்ட் அரசின் செயல்பாட்டை ஷேம்ஃபுல் என்று கூறிய மோடியின் தாக்குதல்தான் ஷேம்ஃபுல். மோடி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஆட்சி செய்கிறாரா அல்லது ஆர்.எஸ்.எஸ்.,சின் கொள்கைப்படியா அல்லது மனுஸ்ம்ருதியின்படியா?

மோடி இந்த நாட்டின் கலாசாரம் மற்றும் சரித்திரம் குறித்து லெக்சரர்கள் உரைகள் கொடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மோடி உங்கள் கலாசாரம் ஹிட்லரின் கலாசாரம். கடவுளின் சொந்த நாட்டில் உங்கள் வெறுப்பால் தொந்தரவு செய்யாதீர்கள்.

மோடி.. கேரளா ஒன்றும் தீவிர குழுக்களிடமிருந்து கலாசார பாடங்களைக் கற்க வேண்டிய நிலையில் இல்லை… எது ஷேம்ஃபுல் என்றால், உடன்கட்டை ஏறுவதையும், கற்பழிப்பாளர்களுக்கு ஆதரவு கொடுப்பதையும், சட்டத்தையும் நீதிமன்றத்தையும் அவமதிப்பதையும் செய்யும் பாஜக.,வினர் செயல்தான் ஷேம்ஃபுல்…

  • என்ற ரீதியில் தொடர்ச்சியான டிவிட்டர் பதிவுகளைச் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.