modi thiruvananthapuram2 - 2026

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற பத்மநாபஸ்வாமி கோயிலுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தரிசனத்துக்காக வந்திருந்தார்.

அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப் பட்டது. பின்னர் ஸ்வாமி தரிசனத்துக்குச் சென்ற மோடி, தாம் அங்கே இந்தியாவின் அமைதிக்கும் 130 கோடி மக்களின் மகிழ்ச்சிக்கும், வளத்துக்கும் ஸ்ரீ பத்மநாபஸ்வாமியிடம் பிரார்த்தனை செய்ததாகக் கூறினார்.

modi thiruvananthapuram1 - 2026

சுவாமி தரிசனத்துக்காக வந்த மோடி, கேரளத்தின் பாரம்பரிய உடை அணிந்து கோயிலுக்கு வந்தார். வேட்டி, மேல் அங்கவஸ்திரம் ஆகியவை தரித்துக் கொண்டு வாந்தார். உடன் கேரள ஆளுநர் சதாசிவம் வந்திருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending