இரண்டாவது டி20 போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

Published:

indian cricket - 2026
File Copy

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தின் ஈடன்பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது .இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.

159 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியில், துவக்கம் அதிரடியாக அமைந்தது. அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 28 பந்துகளில் 50 ரன்களும், ஷிகார் தவான் 30 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து விஜய் ஷங்கர் 14 ரன்களில் ஆட்டம் இழந்த போதிலும், ரிஷாப் பண்ட் 40 ரன்களுடனும், தோனி 20 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் வெற்றி தேடித் தந்தனர்.

இந்திய அணி 19வது ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்து வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

முழுமையான ஸ்கோர் கார்டுக்கு பார்க்க… தினசரி கிரிக்கெட் பக்கம்

Related articles

Recent articles

spot_img