டி20 – ரன் குவிப்பாளர்களில் முதல் இடத்தில் ரோ‘ஹிட்’

சற்றுமுன் லைஃப் ஸ்டைல் விளையாட்டு
Rohit Sharma 4 - 2026

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து இந்திய வீரர் ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார். டி20 கிரிக்கெட் போட்டிகளில் 2,280 ரன்கள் சேர்த்து அதிக ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.

சர்வதேச டி- 20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்து நியூசிலாந்து வீரர் மார்டின் குப்தில் முதல் இடத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி- 20 போட்டியில் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்த ரோகித் சர்மா 35 ரன்களை கடந்தபோது மார்ட்டின் குப்திலின் சாதனையை முறியடித்து முதல் இடம் பெற்றார்.

இதுவரை 2288 ரன்களைக் குவித்து முதலிடத்தில் உள்ள ரோகித் சர்மா, அதிக சதங்கள் அடித்தவர் எனும் பட்டியலிலும் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.