ரபேல் விவகாரத்தில் இன்று சிஏஜி அறிக்கை தாக்கல்!

இந்தியா சற்றுமுன்
03 July19 Parliment - 2026

ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் இன்று சி.ஏ.ஜி., அறிக்கை தாக்கல் செய்யப் படுகிறது.

ரபேல் போர் விமானங்கள் வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் இன்று சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை வாரியத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள டசால்ட் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன ரபேல் போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு அளிக்கப்பட்ட விலை அதிகம் என்றும், டசால்ட் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் டிபென்சை இந்த ஒப்பந்தத்தில் சேர்த்தது தவறு என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றச்சாட்டு சுமத்தி வருகிறார். 

இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே பலமுறை விவாதிக்கப்பட்டு விட்டது. நீதிமன்றத்தில் சென்று, உச்ச நீதிமன்றமும் இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று கூறி விட்டது. ஆயினும், நாடாளுமன்ற நேரத்தை வீணடித்து, பல்வேறு அலுவல்களை முடக்கி வைத்து வருகிறது காங்கிரஸ். 

இந்நிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று சி.ஏ.ஜி. எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை வாரியம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாகக் கூறப் படுகிறது. தற்போதைய மக்களவையின் கடைசிக் கூட்டம் நாளை முடிகிறது. இந் நிலையில் இன்று சி.ஏ.ஜி., அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.