pakistan terror funding3 - 2026

காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆயினும், பாகிஸ்தான், சீனா ஆகியவை மௌனம் காத்துள்ளன.

காஷ்மீரில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதல் கண்டனத்திற்குரியது என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். மேலும், தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு அவர் இரங்கல் தெரிவித்தார்.’

பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு நேபாள பிரதமர் ஷர்மா ஒலியும் கண்டனம் தெரிவித்துள்ளார். வீரர்கள் உயிரிழப்புக்கு பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

வங்கதேசம், பூடான், மாலத்தீவு, ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன.

ஜெர்மனி, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளும் தீவிரதாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால்….  பாகிஸ்தானும், சீனாவும் இந்த தாக்குதல் குறித்து எவ்வித கண்டனத்தையும் தெரிவிக்காமல் மௌனமாக உள்ளன.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி… அழைக்கிறார் மோதிஜி!

ஆக்ரமிப்பு காஷ்மீர் மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அமெரிக்கா எச்சரித்திருந்த நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending