நேதாஜி குடும்பத்தினர் உளவு பார்க்கப்பட்ட தகவல்: ஆச்சரியப்பட ஏதுமில்லை என்கிறார் மணீஷ் திவாரி

புது தில்லி: நேதாஜி குடும்பத்தினர் உளவு பார்க்கப்பட்டது குறித்து வெளியாகியுள்ள தகவல் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி, இதுபோல் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்தச் செய்தி தவறானது. உளவு பார்ப்பது காங்கிரஸ் கலாசாரம் அல்ல. நேருவும், நேதாஜியும் இணக்கமான உறவுடன்தான் இருந்தனர். இருப்பினும் இந்தத் தகவல் பற்றி ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றார். இது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் எம்.ஜே.அக்பர், நேதாஜி மீது காங்கிரஸ் வைத்திருந்த அச்சத்தையே இது காட்டுகிறது. காங்கிரசுக்கு எதிரான பலம் மிகுந்த தலைவராக அவர் இருந்தார். எனவே காங்கிரஸ் இந்த உளவு வேலையைச் செய்துள்ளது என்றார்.