வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் பிரிவினைவாத பயங்கரவாதி யாசின் மாலிக்!

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் வீட்டுக்காவலில் வைக்கப் பட்டுள்ளார்.

காஷ்மீரில் பிரிவினைவாத இயக்கத் தலைவர்களில் ஒருவர், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக்! இவர், நேற்று இரவு முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

வரும் பிப்ரவரி 25ஆம் தேதி திங்கள் கிழமை அன்று சட்டப்பிரிவு 35-ஏ தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் மாநிலத்தில் பதற்றத்தை தணிக்க யாசின் மாலிக்கை வீட்டுச் சிறையில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

இந்திய இறையாண்மையைக் குலைத்து பிரிவினைவாத கோஷம் எழுப்பும் காஷ்மீர் பிரிவினை பயங்கரவாதி யாசின் மாலிக்குடன், இந்திய இறையாண்மையைக் குலைக்கும் பிரிவினைவாதி செபஸ்டியன் சீமான் (2013)

இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்குவது குறித்தும் இப்போது கருத்துகள் எழுந்து வருகின்றனர்.

டிவிட்டர் பக்கங்களில் யாசின் மாலிக் குறித்தும் பாகிஸ்தான் மீதான காதல் குறித்தும் பலர் விமர்சனங்களைச் செய்து வருகின்றனர்.

உங்களுக்கோ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லை! உங்களுக்கு சுதந்திரம் வேண்டும். நீங்கள் சுதந்திரமாக பாகிஸ்தானி என்று கோஷமிட சுதந்திரம் வேண்டும். பாகிஸ்தான் நமது என்று கோஷமிடுகிறீர்கள். பாகிஸ்தானி பயங்கரவாதிகளான நீங்கள், இந்திய ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலைக் கொண்டாடுகிறீர்கள். .இந்தியா திரும்பிப் போ என்று சுவர்களில் எழுதுகிறீர்கள்! அப்படி இருக்கும் போது, எதற்காக உங்களுக்கு சட்டப்பிரிவு 35ஏ மற்றும் 370 எல்லாம்..? இவை உங்களை இந்தியன் என்றுதானே ஆக்குகின்றன? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

#YasinMalik detention comes ahead of a crucial hearing on Article 35-A in Supreme Court which is likely to take place on Monday (February 25)

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...