தென்கொரியக் குழந்தைகள் பாடிய வைஷ்ணவ ஜனதோ! மோடிக்கு கௌரவம்!

Published:

south korean kids - 2026

வெள்ளிக்கிழமை நேற்று பிரதமர் மோடி தென்கொரியாவின் 2018ஆம் வருட சியோல் அமைதி விருதினைப் பெற்றார். அப்போது, அவரை வரவேற்றும், அவருக்கு மதிப்பு அளிக்கும் விதமாகவும், தென்கொரிய சிறுவர்கள் மகாத்மா காந்திக்குப் பிடித்த வைஷ்ணவ ஜனதோ பாடலை பாடினர். இது நிகழ்ச்சியைக் காண வந்திருந்த அனைவரையும் பெரிதும் கவர்ந்தது.

பிரதமர் மோடிக்கு விருது வழங்கப் பட்ட பின்னர், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் பிரதமர் மோடியை கௌரவிக்கும் விதமாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அவற்றில் அனைவரையும் கவர்ந்த அம்சமாக, தென்கொரியச் சிறார்களின் இந்தப் பாடல் அமைந்திருந்தது.

இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார்.

இதில் தென்கொரியச் சிறுவர்கள் அனைவரும் இந்திய உடை அணிந்து, இதைப் பாடியது கண்களை விட்டு அகலாத வண்ணம் அமைந்திருந்தது என்று அனைவரும் குறிபிட்டனர். குஜராத்தி வைணவ கவிஞரான நர்சிமேத்தா இயற்றிய இந்தப் பாடலை மகாத்மா காந்தி தனது பஜன்களில் பிரதான இடம் பிடிக்க வைத்திருந்தார். அதன் மூலம் இந்தப் பாடல் சுதந்திரப் போராட்டக் கால கட்டத்தில் பெரிதும் மக்களைச் சென்றடைந்தது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img