சாவிற்கு காரணமானவர்கள் பெயரை தொடையில் எழுதி வைத்து பெண் தற்கொலை!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
ஹர்ஹா
ஹர்ஹா

வரதட்சணை கொடுமையினாலும் கணவனின் தகாத செயலாலும் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத்தைச் சேர்ந்த மருத்துவர் ஹிதேந்திரா பட்டேல் மற்றும் 39 வயதான ஹர்ஷா பட்டேல் என்ற இருவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாம் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம், ஹர்ஷா தன் கணவர் வீட்டு வாசல் முன்பு நின்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றிய போது உயிரிழந்தவரின் உடலில் இருந்து தகவல் ஒன்றை பெற்றனர்.

அதாவது தற்கொலை செய்து கொண்ட ஹர்ஷாவின் வலது தொடையில் அவர் தனது கடைசி வாக்குமூலத்தை எழுதியிருந்தார்.

அதில் தன் தற்கொலைக்கு கணவர், மாமனார், மாமியார் தான் காரணம் என்று எழுதி இருக்கிறார். அதோடு கடிதம் ஒன்றையும் அவர் எழுதியிருக்கிறார். அந்த நீண்ட கடிதத்தில் மருத்துவரான தன் கணவர் ஹிதேந்திரா தினமும் தனக்கு மயக்க மருந்து கொடுத்து சீரழித்ததோடு, மோசமாகவும் நடந்து கொண்டார் என எழுதப்பட்டுள்ளது.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

அதுமட்டுமின்றி தனது மாமனார் மாமியாரும் வரதட்சணையாக தங்கம் மற்றும் பணம் கேட்டு தொந்தரவு செய்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆதாரங்களின் அடிப்படையில், ஹர்ஷாவின் கணவர் ஹிதேந்திரா, அவர் பெற்றோர் மற்றும் சகோதரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.