காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங்கை இப்போது காறித் துப்புகிறார்கள் டிவிட்டரிலும் சமூக வலைத்தளங்களிலும்! “Digvijaya Singh”
அவர் பாஜக.,வை விமர்சிக்கும்போது அவரது கருத்துகள் எப்போதும் சர்ச்சைக்குரியதாக அமைந்துவிடும். சில நேரம் தேசத் துரோகக் கருத்தாகவும் அமைந்துவிடும். அப்படி ஒரு தேச விரோதக் கருத்தைத்தான் இப்போது திக்விஜய் சிங் கூறியிருக்கிறார்!
முன்னர் இஸ்லாமியர்களை திருப்திப் படுத்துவதற்காக, இஸ்லாமிய வாக்கு வங்கியை மனதில் கொண்டு, பாஜக., ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றை கடுமையாக விமர்சித்து வந்தார்,. அப்போது, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளிப்பதாகவும் கூறினார். ஆனால் அவரது கருத்துகளுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களே அதிருப்தி தெரிவித்தனர்.
இதனால் சோனியா உத்தரவின்பேரில் அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதை தவிர்த்து வந்தார். தற்போதும் அப்படி சில கருத்துகளை அவிழ்த்து விட்டு வருகிறார். அவை பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளன.
பிப்.14ம் தேதி காஷ்மீர் புல்வாமாவில் பாகிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமிய பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தது தொடர்பாக ஒரு கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசிய போது… புல்வாமாவில் நடந்தது தாக்குதல் அல்ல. அது ஒரு சாதாரண விபத்துதான். அதற்காக போர் நடத்துவது தேவையில்லை… என்றார் அவர்.
அவரது இந்த உளறல் பேச்சு பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. உள்நோக்கத்துடன் தெரிவித்த இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு வக்காலத்து வாங்கும் பேச்சு, காங்கிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் நேரத்தில், திக்விஜய் சிங் ஒரு பேட்டியின் குறிப்பிட்டது, காங்கிரஸ் தலைவர்களையே மிரட்சியில் தள்ளியது. அப்போது அவர், “நான் பிரசாரம் செய்ய ஆரம்பித்தால் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு விழாது. அடிதான் விழும்“ என்றார்.
இதை அடுத்து வாய் மூடி மௌனியாக இருந்த திக் விஜய் சிங், தற்போது நாடாளுமன்றத் தேர்தல் மும்முரமாக பரபரப்பான நிலையை எட்டியிருப்பதால், மீண்டும் உள்நோக்கத்துடன் கருத்துகளைக் கூறி வருகிறார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்கிறார்கள்.!
இந்நிலையில் திக்விஜய் சிங்கை பாஜக.,வினர் திட்டித் தீர்க்கிறார்கள். வார்த்தைப் போர் வெடித்துள்ளது. பத்திரிகைகளில் பேட்டிகள் அதிகம் கொடுக்கிறார்கள். ஊடகப் பேட்டிகளுடன் சமூக ஊடகமான டிவிட்டரில் கழுவி ஊற்றுகிறார்கள். டிவிட்டரில் https://twitter.com/search?q=%22Digvijaya%20Singh%22 என்ற தேடலில் திக்விஜய் சிங்கை பலரும் திட்டித் தீர்த்து வருகிறார்கள்.